பிடிக்காத மனைவிக்காக கதிர் செய்யும் தியாகம்.. கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் எம்டன்

Pandian stores 2 serial Kathir’s sacrifice for an unloved wife: இப்ப வந்த புது சீரியல்களுடன் தாக்குப் பிடிக்க முடியாமல் டிஆர்பி-யின் பின்தங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் சுவாரசியத்தை கூட்டுவதற்காக கடந்த வாரத்திலிருந்து மகா சங்கமத்தில் இணைந்திருக்கிறது. இதில் ராஜி சந்தர்ப்ப சூழ்நிலையால், அத்தை கோமதியின் வார்த்தைக்காக கதிரை திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால் கதிர், ராஜி இருவரும் கீரியும் பாம்புமாய் சண்டை போட்டுக் கொள்பவர்கள். இரண்டு பேருக்கும் எப்போதுமே ஒத்துப்போகாது. இருந்தாலும் ராஜி தன்னுடைய குடும்பமானத்திற்காகவும், கதிர் தன்னுடைய அம்மாவிற்காகவும் இந்த திருமணத்தை  செய்திருக்கின்றனர். கல்யாணம் முடிந்தபின் பாக்யாவின் சப்போர்ட்டுடன்  கதிர்- ராஜி தம்பதியர் ஊருக்கு வருகிறார்கள்

ராஜியின் குடும்பத்தில் உள்ளவர்களை போலவே, பாண்டியனுக்கும் இவர்களது திருமணம் பேரதிர்ச்சியை தருகிறது. பெத்த இரண்டு பசங்களும் அடுத்தடுத்து ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டதால் பாண்டியன் நிலை குலைந்து நிற்கிறார். ராஜி திருமண மண்டபத்தில் இருந்து எடுத்து சென்ற நகை, பணம் எங்கே? என்று ராஜியின் சித்தப்பா கேட்டதும், கதிர் ‘செலவாகிவிட்டது’ என்று சொல்கிறார்.

மொத்த பணத்தையும் உங்க அப்பன் கிட்ட கொடுத்துட்டியா என்றும் ராஜியின் சித்தப்பாகதிரை தரக்குறைவாக பேசுகிறார்.  உடனே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாண்டியன், ‘ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டது பத்தாது என்று, இப்போது திருட்டுப் பழியையும் குடும்பத்திற்கு வாங்கித் தருகிறாயா?’ என்று கதிரை ஓங்கி அறைகிறார்.

அடிக்கிற அடி எல்லாம் வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் மொத்த பழியையும் கதிர் தன்மீது போட்டுக் கொள்கிறார். என்ன தான் பிடிக்காமல் ராஜி தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டாலும், அவர் வெகுளித்தனமாக பொறுக்கிப் பயலுடன் வீட்டை விட்டு ஓடி பணம், நகையை தொலைத்ததை கதிர் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். இந்த நிலைமையில் கதிரை பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது.

எப்படியும் எம்டன், ராஜி- கதிர் இருவரையும் தன்னுடைய வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வார் . தனக்காக தான் சொந்த வீட்டிலே கதிர் அவமானப்படுகிறார் என்று ராஜிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கதிரை பிடிக்க ஆரம்பித்து விடும். பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் கதிர்-முல்லை ஜோடி எந்த அளவிற்கு ஹைலைட்டாக இருந்ததோ, அதற்கு மேலே கதிர்- ராஜி ஜோடி 2ம் சீசனில் செம ரொமான்டிக் கப்புல்லாக இருக்கப் போகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →