பாண்டியன் செய்த உதவியை மறுத்த கதிர்.. தங்கமயிலை அசத்தும் சரவணன்

Pandian stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் கோமதி அரசியை கூட்டிட்டு குமரவேலு கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கு போகிறார். அங்கே ஜட்ஜ் முன்னாடி குமரவேலு என்னென்ன விஷயங்கள் எல்லாம் செய்தார் என்று அரசி சொல்கிறார். குமரவேலுக்கு சப்போர்ட்டாக லாயர் வாதாடிய நிலையில் ஒரு மாசத்துக்கு பிறகு மீண்டும் வரவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.

இதனால் கோமதி புலம்பி கொண்டே வீட்டுக்கு வந்து விடுகிறார். அடுத்து கதிர் பிசினஸ்க்காக பாண்டியன் லோன் விஷயத்திற்கு வந்து கையெழுத்து போடுவதாக சொல்லிவிட்டார்.. இதனால் கோமதி சந்தோசமான நிலையில் பாண்டியனிடம் நன்றி சொல்லிவிட்டு கதிருக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று பெருமைப்படுத்தி கொள்கிறார்.

அடுத்ததாக கதிரிடம் தனியாக பேசிய பாண்டியன் லோன்க்கு நான் கேரண்டி கையெழுத்து போடுவதால் கடை வீட்டு பத்திரத்தை தான் அடகு வைக்கிறேன். அதனால் லோன் அடைக்கும் வரை பிசினஸில் நான் தலையிடுவேன். என்னை கேட்காமல் நீ எதுவும் பண்ண முடியாது, வாரத்துக்கு இரண்டு நாள் எனக்கு கணக்கு காட்ட வேண்டும் என்று சில கமிஷன்களை போட ஆரம்பித்து விட்டார்.

இதனால் கடுப்பான கதிர், கோமதி இடம் சென்று அப்பா எனக்கு எந்த உதவியும் பண்ண வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல சொல்கிறார். கோமதி அதெல்லாம் சொல்ல முடியாது என்று மறுத்த நிலையில் கதிர் பிளாக்மெயில் பண்ணும் விதமாக, அப்பாவிடம் சொல்லவில்லை என்றால் எனக்கும் ராஜிக்கும் நீ தான் கல்யாணத்தை பண்ணி வைத்தாய் என்று சொல்லி மிரட்டி விடுகிறார்.

இதனால் கோமதி, பாண்டியனிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு யாருமே வந்து உதவி பண்ண வில்லை. நீங்களா தான் முன்னேறி ஜெயித்து காட்டியிருக்கிறீர்கள், அதுதான் பெருமையாக இருக்கிறது. அதே மாதிரி கதிரும் முன்னேறி வரட்டும், நீங்க உதவி பண்ண வேண்டாம் என்று சொல்லிய நிலையில் பாண்டியன் கதிர் தான் இந்த மாதிரி சொல்ல சொல்லி இருப்பான் என்று கோபப்பட்டு போய் விடுகிறார்.

அடுத்ததாக கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சரவணன் இடம், அண்ணிக்கு ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்தியா என்று கதிர் மற்றும் செந்தில் கேட்கிறார்கள். அதற்கு சரவணன் இல்லை என்று சொல்லிய நிலையில் ஏதாவது சர்ப்ரைஸ் பண்ணு என்று சொல்கிறார்கள். அந்த வகையில் அப்பாவிடம் பணத்தை வாங்கிட்டு போய் புடவையும் பூவும் வாங்கிட்டு தங்கமயிலுக்கு சர்ப்ரைஸ் பண்ண போகிறார். அத்துடன் வீட்டில் இருப்பவர்கள் இதை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி தங்கமயிலை அசத்தப்போகிறார்கள்.