அறக்கப்பறக்க பாண்டியன் ஸ்டோர்ஸை உருட்டும் இயக்குனர்.. கிரகப்பிரவேத்தில் ஒன்று சேரும் குடும்பம்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருக்கும் விஷயம் கதிருக்கு தெரிந்து விட்டது. இதனால் வீட்டில் பூகம்பமே வெடித்து இந்த வாரம் பரபரப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காக அறக்கப்பறக்க உருட்டி வருகிறார் இயக்குனர். அதாவது நீண்ட வருடங்களாக இவர்களது கனவாக இருந்த புது வீட்டின் கிரகப்பிரவேசம் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது. எல்லோரும் ஒற்றுமையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வசித்து வந்தனர்.

ஆனாலும் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது போல யார் கண் பட்டதோ பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சுக்குநூறாக உடைந்தது. இதைத்தொடர்ந்து புது வீடு கட்டி அங்கு எல்லோருமே மீண்டும் பழையபடி சந்தோஷமாக வாழ வேண்டும் என முடிவெடுத்தனர். அதற்குள்ளாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளான தனம், முல்லை மற்றும் ஐஸ்வர்யா மூவரும் வாரிசுகளை பெற்றெடுத்து விட்டனர்.

இப்போது வீடும் கட்டப்பட்ட நிலையில் இந்த வாரம் புதுமண புகுவிழாவை வைத்திருக்கின்றனர். நிறைய வேலை இருக்கும் நேரத்தில் இரண்டு நாட்களில் எப்படி முடிப்பது என்று ஜீவா குழப்பத்தில் இருக்கிறார். அதான் நாலு பேர் இருக்கோம், எப்படியும் முடித்து விடலாம் என்று கதிர் நம்பிக்கை கொடுக்கிறார்.

மேலும் அனைவரும் தனத்திற்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார்கள். அதாவது புது வீட்டிற்கு தனலட்சுமி இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எப்போதுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று தங்களது சொத்துக்களுக்கு பெயர் வைத்த மூர்த்தி இப்போது தனத்தின் பெயரை வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இதனால் மீனாவின் அப்பா, முல்லையின் அம்மா, ஐஸ்வர்யாவின் சித்தி கலகம் செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனாலும் மண்டை மேல் இருக்கும் கொண்டையை வடிவேலு மறப்பது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் கதிருக்கு தனத்தின் பிரச்சனை தெரிந்ததால் என்ன செய்யப் போகிறார் என்பதை மறந்துவிட்டார்.