பாண்டியன் எடுத்த முடிவு, குடும்பமே சின்ன பின்னமாக உடைய போகுது.. காதலில் விழுந்த கதிர்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பாண்டியனுக்கு மனசுல என்னமோ வீட்டில் பார்த்து வைத்த பெண் மருமகளாக வந்தால் தான் அந்த குடும்பமே சந்தோஷமாக இருக்கும் என்ற நினைப்பில் ஓவர் சந்தோஷத்தில் ஆட்டம் போடுகிறார்.

அதிலும் பாண்டியனின் மகள், மீனா மற்றும் ராஜியை பார்த்து ஓடிப்போய் கல்யாணம் பண்ணினவர்கள் தானே என்று ஏளனமாக பேசுகிறார். அந்த வகையில் சரவணனுக்கு வரப்போற மனைவிதான் முறைப்படி வருகிறார் என்ற ஆணவத்தில் அடிக்கடி ராஜி மற்றும் மீனாவை குத்தி காட்டி பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் சரவணனுக்கு நிச்சயதார்த்தம் பண்ண தங்கமயில் வீட்டிற்கு போய் விடுகிறார்கள். ஆனால் அங்கே போய் பார்த்தால் சொந்தக்காரர்கள் என்று யாருமே வரவில்லை. இதைப்பற்றி பாண்டியன், தங்கமயில் அப்பாவிடம் கேட்டதற்கு அனைவரும் கல்யாணத்துக்கு தான் வருவார்கள் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

இதையும் முட்டாள்தனமாக நம்பி பாண்டியன் நிச்சயதார்த்தத்தை நடத்த போகிறார். பிறகு கோமதியின் மகள் தங்க மயிலை பார்த்ததும் இந்த செயின் எல்லாம் பார்ப்பதற்கு ஒரிஜினலாகவே இல்லையே, எங்க வாங்கினீங்க என கேட்கிறார். உடனே தங்கமயிலின் அம்மா நாங்கள் வழக்கமாக செய்யக்கூடிய கடையில் ஆர்டர் கொடுத்து செய்தோம் என்று பொய் சொல்லி சமாளித்து விடுகிறார்.

ராஜியை சைட் அடிக்கும் கதிர்

பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து தங்க மயிலுக்கும் சரவணனுக்கும் நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்து விடுகிறார்கள். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரியும் தங்கமயில் படிக்கவே இல்லை என்றும் வசதி வாய்ப்பு எதுவும் கிடையாது. பொய் பித்தலாட்டம் சொல்லி அராஜகம் பண்ணும் ஒரு தரலோக்கல் குடும்பம் என்று.

அத்துடன் தங்கமயில் அம்மாவின் பேச்சை கேட்டு அந்த குடும்பத்திலிருந்து சரவணன் பிரிப்பதற்கு திட்டம் போடப் போகிறார். மேலும் ஒற்றுமையா இருக்க குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கி மீனா மற்றும் ராஜிக்கும் இடையில் கலகத்தை உண்டாக்க போகிறார்.

ஆக மொத்தத்தில் பாண்டியன் எடுத்த அவசர முடிவால் குடும்பமே சின்னா பின்னமாக உடைய போகிறது. இதற்கிடையில் ராஜியை கொஞ்சம் கொஞ்சமாக கதிர் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். ஏற்கனவே ராஜி மனதில் கதிர் ஆழமான ஒரு இடத்தை பிடித்து விட்டார். அந்த வகையில் இவர்களுடைய காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை அதிகரித்துக் காட்டினால் இன்னும் நாடகம் சூடு பிடிக்கும்.