Pandiyan Stores serial: கடந்த 5 வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், சுமார் 1300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த சீரியலை முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு தமிழக ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏனென்றால் அண்ணன்- தம்பி உறவை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியலில் கூட்டுக் குடும்ப மகத்துவத்தை காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஸ்டாலின், சுசித்ரா, குமரன், வெங்கட், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்தில் தொடர்ந்து நடித்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால் 2ம் பாகத்தில் நடிக்க முடியாது என இரண்டு பிரபலங்கள் அடம் பிடிக்கின்றனர். இவர்கள்தான் இந்த சீரியலின் ஆணிவேர் என்பதை அறிந்து தான் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியாது என விலக பார்க்கின்றனர்.
அதிலும் சீரியலில் தனம் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி நடிக்கும் சுசித்ரா ஏற்கனவே 5 வருடங்களாக இந்த சீரியலில் நடித்து விட்டதால் வேறு சீரியல்களுக்கு செல்லலாம் என முடிவெடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியாது என சொல்கிறார். தமிழ் திரையுலகில் அதிக அனுபவம் கொண்ட நடிகை சுசித்ரா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து பிறகு சில குணசித்திர கதாபாத்திரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கதிர் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் குமரன் சீரியலில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் துவங்கப்பட்ட நாளிலிருந்து கதிர் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் குமரன் இனி தன்னுடைய சினிமா கேரியரில் முன்னேறி செல்ல வேண்டும் என்று இந்த சீரியலின் இரண்டாம் பாகத்திலிருந்து விலகப் பார்க்கிறார்.
சுசித்ரா மற்றும் குமரன் இருவரும் நடிக்க முடியாது என அடம் பிடிப்பதால் சீசன் 2வில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் இது பாண்டியன் ஸ்டோர்ஸ் பாலிடிக்ஸ், இதை கற்றுக் கொடுத்ததே விஜய் டிவி தான். இப்படி எல்லாம் செய்தால் தான் சம்பளமும் உயரும். அதே சமயம் சீரியலில் மற்ற நடிகர்களுக்கிடையே கெத்து காட்ட முடியும் என்பதற்காகவே இப்படி செய்கின்றனர்.