Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி குமரவேலுவை காதலித்ததால் பாண்டியன் அவசர அவசரமாக அக்கா மகனுடன் நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு பண்ணி விட்டார். அத்துடன் பாண்டியனின் அக்கா, வரதட்சணையாக ஆடம்பரமான கல்யாணம் கார் போன்ற செலவுகளை பாண்டியன் தலையில் கட்டி விட்டார். மற்ற விஷயத்தில் காரராக இருக்கும் பாண்டியன் தற்போது வேறு வழி இல்லை அரசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதால் எல்லாத்துக்கும் ஓகே சொல்லிவிட்டார்.
இதனால் பணத்துக்கு என்ன பண்ணுவது என்று பாண்டியன் தடுமாறிய பொழுது மீனா ஆறுதல் சொல்லும் விதமாக பேசுகிறார். அப்பொழுது பாண்டியன் யாரும் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் பார்த்த அரசி நான் செய்த தவறால் நீங்கள் ரொம்ப கஷ்டப்படுறீங்க. இனிமேல் கஷ்டப்படும் படி நான் விடமாட்டேன் என்று சொல்லி அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.
அடுத்ததாக செந்தில் தனியாக பீல் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது மீனா என்ன என்று கேட்கிறார். அதற்கு செந்தில் சொல்லியது என்னவென்றால் எனக்கு வேலை விஷயமாக ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்ட பொழுது ஓவராக பேசிய என்னுடைய அப்பா அரசி கல்யாணத்திற்கு இவ்வளவு பணம் செலவழிப்பதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்காமல் ஓகே என்று சொல்லியது தான் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.
அரசி என் தங்கை தான் அவளுக்கு நல்லபடியாக கல்யாணம் நடந்தால் எனக்கு சந்தோசம் தான். ஆனால் எனக்கு ஓரவஞ்சனை பண்ணிவிட்டு எங்க அப்பா இப்படி ஒரு தலைப்பட்சமாக இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று மீனாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அதற்கு மீனா உங்களுடைய வேலையும் அரசியின் வாழ்க்கையும் ஒன்னு கிடையாது. அதுவும் இப்போது மாமாவுக்கு அரிசியை எப்படியாவது நல்லபடியாக கட்டி கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறது.
அதனால் அவர் பக்கம் இருந்து யோசித்துப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று செந்திலுக்கு ஆறுதல் சொல்கிறார். அடுத்ததாக இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக கோமதி பாண்டியன் மற்றும் அரசியை கூட்டிட்டு கோவிலுக்கு போக வேண்டும் என்று முடிவு பண்ணுகிறார். இப்படி இவர்கள் போகும் பட்சத்தில் தான் சரவணனுக்கு தங்கமயில் பற்றிய உண்மை தெரிய வரப்போகிறது.
அதனால் செந்தில் மற்றும் கதிர், சரவணன் இடம் இப்போதைக்கு யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று உண்மையை மறைக்க சொல்லி விடுவார். அதனால் அரசி கல்யாணம் முடியும் வரை தங்கமயில் பற்றிய உண்மை தெரியப்போவதில்லை. அடுத்ததாக மீனா, அரசு அதிகாரியாக கடமையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சக்திவேல் முறைப்படி இல்லாமல் வாங்கிய கடையை இடிப்பதற்கு தயாராகி விட்டார்.
இதைக் கேள்விப்பட்டு வந்த சக்திவேல் மற்றும் குமரவேலு, மீனாவிடம் பிரச்சினை பண்ணுகிறார்கள். ஆனாலும் மீனா தன் பக்கம் நியாயம் இருப்பதால் அந்த கடையை இடிப்பதற்கு தயாராகி விட்டார். இனி இந்த பிரச்சினையை வைத்து சக்திவேல், மீனா மற்றும் பாண்டியன் குடும்பத்தை பழிவாங்குவதற்கு குமரவேலுவை தூண்டிவிட்டு அரசி வாழ்க்கையை பாழாக்கி விடுவார்.