Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக கோமதி, மகளையும் மருமகள்களையும் கூட்டிட்டு கோவிலுக்கு போயிருக்கிறார். அதனால் பாண்டியன் பழனிவேலு செந்தில் சரவணன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பழனிவேலுவை வீட்டிற்கு வரச் சொல்லி சுகன்யா தொடர்ந்து போன் பண்ணி கொண்டே இருக்கிறார்..
ஆனால் பழனிவேலுக்கு பாண்டியன் அடுத்தடுத்து கடை வேலையை கொடுத்ததால் போன் கூட பேச முடியாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் சுகன்யா பழனிவேலுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லி டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார். வேற வழி எதுவும் இல்லாததால் பழனிவேலு வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் வழக்கம் போல் வார்த்தைகளால் பழனிவேலுவின் மனதை நோகடிக்கிறார்.
இந்த குடும்பத்துக்காக நான் மட்டும் ஏன் எல்லா வேலையும் பார்க்கணும். நீங்கள் தான் கடையில் எடுபிடி வேலை பார்க்கிறீர்கள் என்றால் நானும் வீட்டு வேலையை பார்த்து வேலைக்காரியாக இருக்க வேண்டுமா என்று சண்டை போட ஆரம்பித்து விட்டார். உடனே பழனிவேல் அதற்கு நான் என்ன பண்ண என்று கேட்கும் பொழுது எல்லா வேலையும் நீங்கதான் பார்க்க வேண்டும் என்று தண்ணீர் குடத்தை கொடுத்து தண்ணீர் எடுக்க சொல்கிறார்.
அடுத்ததாக எல்லா காய்கறியும் கொடுத்து கட் பண்ண சொல்லி வீடு பெருக்கி துடைத்து பழனிவேலுவை வேலைக்காரர் போல வேலை வாங்குகிறார். பழனிவேலு பாவம் போல் எல்லா வேலையும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சரவணன் வந்துவிடுகிறார். அப்பொழுது அடுப்பாங்கரையில் இருந்து சுகன்யா பழனிவேலுவை மட்டமாக திட்டிக் கொண்டிருப்பதையும் சரவணன் கேட்டு விடுகிறார்.
பிறகு சரவணன் வந்துவிட்டார் என்று தெரிந்ததும் சுகன்யா அப்படியே நல்லவர் போல் வேஷம் போட்டு பழனிவேலுவுக்கு மரியாதை கொடுத்து பேச ஆரம்பித்து விட்டார். ஆனாலும் சரவணனுக்கு சுகன்யா பற்றி தெரிந்து விட்டதால் பழனிவேலுவின் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது என்று புரிந்து கொண்டு மன ஆறுதலுக்காக இருவரும் மொட்டை மாடியில் இருந்து குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
நிச்சயம் சுகன்யாவின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட சரவணன், செந்தில் மற்றும் கதிரிடம் சொல்லி பழனிவேலுவை காப்பாற்ற வேண்டும். இது மட்டும் இல்லாமல் பாண்டியனும் பழனிவேலுவை புரிந்து கொள்ளாமல் ஒரு பக்கம் டார்ச்சர் பண்ணுகிறார். அதாவது சுகன்யா கொடுத்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பழனிவேலுக்கு பாண்டியன் போன் பண்ணி ஏன் கடைக்கு இன்னும் வரவில்லை என்று திட்டுகிறார்.
பழனிவேல் உண்மையை சொல்ல முடியாத சூழ்நிலையால் பாண்டியன் மச்சான் என்று கூட பார்க்காமல் மட்டமாக திட்டி விடுகிறார். இத்தனை வருஷமாக அந்த குடும்பத்தில் இருந்து பாடுபட்ட மச்சானையும் பாண்டியன் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளையும் புரிந்து கொள்ளவில்லை.