பாண்டியனுக்கு எதிராக செயல்படும் மருமகள்கள்.. தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்த கோமதி

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அரசியின் காதலால் பூகம்பமே வெடித்தது. இதை அடுத்து பாண்டியன் தனது அக்கா மகன் சதீஷ்க்கு அரசியை திருமணம் முடிக்க உள்ளார்.

இதனால் பெண் பார்க்க வந்த நிலையில் சதீஷ் இன்னும் இரண்டு மாதத்தில் துபாய்க்கு செல்ல இருப்பதால் உடனடியாக திருமணம் நடத்த வேண்டும் என்று பேசிவிட்டனர். ஆனால் இதில் பாண்டியனின் மகன் மற்றும் மருமகள்களுக்கு சுத்தமாக உடன்பாடு இல்லாமல் இருக்கிறது.

ஏனென்றால் அரசி இப்போது தான் காலேஜில் படித்து வருகிறார். கல்யாணத்தால் அவரது படிப்பை நிறுத்த நேரிடும் என்பதால் ராஜி மற்றும் மீனா இருவரும் திட்டம் போடுகிறார்கள். எப்படியாவது சதிஷ் இடம் இது குறித்து பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அரசி திருமணத்தை நிறுத்த போராடும் பாண்டியன் மருமகள்

அதேபோல் அவரிடம் போன் செய்து கோயிலுக்கும் வர சொல்லிவிட்டார்கள். ஆனால் மீனா மற்றும் ராஜுடன் அவரது அத்தை கோமதியும் கோயிலுக்கு செல்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மீனா மட்டும் நைசாக நகர்ந்து சதீஷை சந்திக்க செல்கிறார்.

சதீஷ் தனது அம்மாவுடன் கோயிலுக்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியாமல் மீனா இந்த கல்யாணத்தை ஆடல் பாடலுடன் அமர்க்களமாக செய்ய விரும்புகிறோம். இதற்கு அரசி சம்மதம் சொல்லிவிட்டால், மாப்பிள்ளை தம்பி கிட்ட சம்மதம் கேட்க தான் வந்தேன் என்ற சமாளிக்கிறார்.

மேலும் கோமதி மீனாவை எங்க காணும் என்று தேடும்போது சம்பந்தி வீட்டார் உடன் மீனா வருவதை பார்த்து விடுகிறார். அவர்கள் போன பிறகு ராஜி, மீனா இருவரிடமும் இந்த கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுகிறீர்களா என்று கடுமையாக நடந்து கொள்கிறார்.

அரசியும் இந்த திருமணத்தில் ஈடுபாடு இல்லாத நிலையில் திட்டமிட்டு இதை நிறுத்த மருமகள்கள் போராடி வருகிறார்கள். ஒருபுறம் சுகன்யாவும் சூழ்ச்சி செய்து வருகிறார். இவ்வாறு எதிர்பாராத திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது ‌