சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், வாத்தியார் இறப்பிற்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பெண்கள் எடுத்து வச்ச முயற்சியில் தோற்றுப் போய்விட்டார்கள். குணசேகரன் சொன்னபடி ஞானம் கோர்ட்டுக்கு வந்து நான்தான் தெரியாத்தனமாக அவரை தள்ளிவிட்டேன் என்று பொய் சொல்லியதால் ஞானம் ஜெயிலுக்கு போகும் படி நிலைமை ஆகிவிட்டது.
இதனால் குணசேகரன் அறிவுக்கரசி கதிர் தப்பித்து விட்டார்கள். இருந்தாலும் போவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நான்கு பெண்களுக்கு சொகுசான வாழ்க்கை வேண்டும் என்பதால் குணசேகரன் வீட்டிலேயே அண்டிப் பிழைக்கலாம் என்று போவதற்கு தயாராகி விட்டார்கள்.
ஆனால் நான் மட்டும் வேலைக்காரியாக இருந்தால் போதாது நம்மை நம்பி வந்த பார்க்கவியும் வேலைக்காரியாக இருக்க வேண்டும் என்று குணசேகரன் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்கள். அதுலயும் போலீஸ் பாதுகாப்புடன் வரும் இவர்கள் பார்க்கவிக்கும் இவர்களுக்கும் எந்தவித ஆபத்தும் வரக்கூடாது.
அப்படி ஒரு வேலை வந்து விட்டால் அதற்கு குணசேகரன் கும்பல் தான் காரணமாக இருக்கும் என்று போலீஸிடம் எழுதி வைத்து வந்திருக்கிறார்கள். இவ்வளவு விஷயம் நடந்தும் எதுவும் செய்ய முடியாமல் ஜீவானந்தம் வெத்துவேட்டாக தான் இருக்கிறார். ஞானமாவது அண்ணனுக்கு பிரயோஜனமாக ஜெயிலுக்கு போனார், ஆனால் இந்த சக்தி எந்த லிஸ்டில் இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு டம்மியாக வருகிறார்.