வெண்ணிலாவை தூண்டிவிட்டு விஜய்யை கோபப்படுத்திய பசுபதி.. நவீன் வந்ததால் காவிரிக்கு ஏற்பட்ட பிரச்சினை

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா மற்றும் மாமா பிரச்சனை பண்ணுவதற்கு காரணம் பின்னாடியில் இருந்து பசுபதி ராகினி தூண்டி விடுவது தான் என்று விஜய்க்கு புரிந்து விட்டது. அதனால் கோபப்படும் விஜய் வீட்டில் இருக்கும் ராகினியை வெளியே அனுப்ப வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.

அப்பொழுது அங்கே வந்த அஜய்யிடம், கொஞ்சமாவது அண்ணன் மீது உனக்கு பாசம் இருந்தால் நீயும் இதற்கு உடந்தையாக இருக்க மாட்டாய். உன் பொண்டாட்டியும் கண்டித்து வைத்திருப்பாய் என்று சொல்லி அஜய்யை வீட்டை விட்டு போக சொல்கிறார். உடனே அஜய், ராகினியை கூட்டிட்டு பசுபதி வீட்டுக்கு போய் விடுகிறார். அடுத்ததாக பொருட்காட்சியில் அப்பள கடையை போட்டு இருக்கும் காவிரி அங்கு இருக்கும் சில ஆடர்களை பிடிக்கிறார்.

அந்த சமயத்தில் நவீன், காவிரியை பார்த்து பேசுவதற்கு வருகிறார். அப்படி இரண்டு பேரும் பேசும் பொழுது வெண்ணிலா வந்து பிரச்சினை பண்ணியதை நினைத்து காவிரியிடம் நவீன் கேட்கிறார். அதற்கு காவிரி, எல்லாத்தையும் விஜய் சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். கூடிய சீக்கிரத்தில் வெண்ணிலா பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.

அதன் பிறகு அம்மாவையும் சமாளித்து நானும் விஜய்யும் ஒன்று சேர்ந்து விடுவோம் என சொல்கிறார். இப்படி இவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் யமுனா மற்றும் கங்கா அந்த பொருட்காட்சிக்கு வருகிறார்கள். அப்பொழுது இவர்கள் இரண்டு பேரையும் பார்த்த யமுனா முகம் அப்படியே மாறிவிட்டு சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார்.

நவீன் காவிரியிடம் பேசிவிட்டு கிளம்பிய நிலையில் யமுனா கங்கா அங்கே காவிரி கூடவே இருக்கிறார்கள். ஆனால் யமுனாவிற்கு நவீன் காவிரியிடம் பேசியது பிடிக்காததால் காவிரியை முறைத்துக் கொண்டு கோபமாக பார்த்துக் கொள்கிறார். இதனால் காவிரியிடம் பிரச்சினை பண்ணும் விதமாக யமுனா சந்தேகப்பட்டு ஏதாவது கேள்வி கேட்டு நோகடிக்கும் படி பேசி விடுவார்.

அடுத்ததாக பசுபதி வீட்டுக்கு வந்த ராகினி மற்றும் அஜய், காவேரி மற்றும் விஜய் வாழ்க்கைக்குள் பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக மறுபடியும் பிளான் பண்ணுகிறார்கள். அந்த சமயத்தில் வெண்ணிலா மற்றும் மாமாவும் வந்துவிடுகிறார்கள். அப்பொழுது பசுபதி, வெண்ணிலாவிடம் பத்திரிகையாளர்கள் முன் உன் வாழ்க்கையை போய்விட்டது என்று செண்டிமெண்டாக பேசி அனைவரையும் நம்ப வைத்து விட வேண்டும் என தூண்டி விடுகிறார்.

இதனைத் தொடர்ந்து வெண்ணிலா மற்றும் மாமாவும் விஜய் வீட்டிற்கு போகிறார்கள். அங்கே விஜய் பார்த்து பணத்துக்காக வந்தவளுக்கு ஏன் இப்படி சப்போர்ட் பண்ணுகிறீர்கள். நான் உங்க மேல உயிரே வைத்திருக்கிறேன் என்று விஜய்யிடம் சொல்கிறார். இதை கேட்டதும் விஜய் கோபப்பட்டு வெண்ணிலாவை திட்டி விடுகிறார். இதனை தொடர்ந்து விஜய் மற்றும் காவிரிக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக பசுபதி அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்.