Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கடந்த இரண்டு வாரங்களாக விஜய் மற்றும் காவிரியின் நெருக்கமும் பாசமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இவர்களை யாரும் தொந்தரவு பண்ணாத படி தனியாக இருந்து ஒருவருக்கு ஒருவர் அன்பை பாசமழையாக பொழிகிறார்கள். இதை பார்த்த விகா ரசிகர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஆனால் தற்போது வருகிற காட்சிகள் அனைத்தும் அப்படியே தலைகீழாக மாறப்போவது போல் பசுபதி எல்லா வேலையும் பார்த்து வருகிறார். அதாவது இதுவரை பசுபதி, காவிரியை பழிவாங்க வேண்டும் என்று தான் எல்லா சூழ்ச்சியும் செய்து வந்தார். ஆனால் எப்பொழுது விஜய், பசுபதியை தாக்கி அடித்தாரோ அப்பொழுதே விஜய்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று பசுபதி சூழ்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார்.
இதில் பலியாடாக சிக்கப்போவது அஜய் மட்டும் அவருடைய அப்பா தான். அதாவது அஜயை கூப்பிட்டு வெண்ணிலாவின் குடும்பத்தை கார் விபத்தில் கொலை பண்ண சொன்னது விஜய் தான் என்று போலீஸிடம் சொல்ல வேண்டும் என அஜய் இடம் பசுபதி சொல்கிறார். அதற்கு அஜய், காவிரி தானே நம்மளுடைய டார்கெட். ஆனால் இப்படி போலீஸ் இடம் சொல்லிவிட்டால் விஜய் அண்ணாவுக்கும் என்னுடைய அப்பாவுக்கும் ஆபத்து தான் வரும் என்று சொல்கிறார்.
உடனே அங்கே இருந்த ராகினியும் அஜய் சொல்வது தான் சரி, நாம் எதற்கு விஜயை மாட்டி விட வேண்டும். காவிரியை தான் கஷ்டப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். உடனே இவர்களையெல்லாம் சமாளிக்கும் விதமாக பசுபதி சொன்னது என்னவென்றால் இப்படி ஒரு கேஸ் கொடுத்தால் தான் விஜய் பயப்படுவான், அதை வைத்து நாம் மிரட்டி வெண்ணிலா கழுத்தில் தாலி கட்ட வைத்து விடலாம் என்று சொல்லி அஜய் மற்றும் ராகினியை நம்ப வைத்து விடுகிறார்.
ராகினியும் மக்காக இருப்பதால் அப்பா என்ன சொன்னாலும் சரி என்று அஜயை விஜய்க்கு எதிராக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்கிறார். இந்த சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு முழிக்க போகும் விஜய், பசுபதி போட்ட பிளானின் படி பயந்து போய் வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டுவதற்கு சும்மா சம்மதம் கொடுப்பது போல் நடிக்கப் போகிறார். அதை நம்பி ஏற்பாடுகளை பண்ணும் பசுபதி கோவிலில் விஜய் இடம் அவமானப்பட்டு அடிப்பட்டு நிற்கப் போகிறார்.