எதிர்நீச்சல் 2 ஆணாதிக்க அண்ணனும் தற்குறி தம்பிகளும்.. விஜய் டிவி மூலம் பதிலடி கொடுத்த ஜனனி

Serial: நிஜத்தில் நடக்கிறது தான் சினிமாவில் காட்டுகிறார்கள் என்று ஒரு பக்கம் சொன்னாலும், சினிமாவை பார்த்து தான் காலம் கெட்டுப் போய்விட்டது என்று புலம்புவதும் வழக்கம் தான். அதற்கு ஏற்ற மாதிரி தான் சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது எதிர்நீச்சல் ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆனாலும் முதல் பாகத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போது ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 ரொம்பவே சொதப்பல்லாக தான் இருக்கிறது.

அண்ணன் தம்பிகள் சொத்துக்காகவும் கௌரவத்திற்காகவும் என்ன வேணாலும் பண்ணுவாங்க என்பதை நிரூபிக்கும் வகையில் எதிர்நீச்சல் சீரியல் முழுக்க முழுக்க ஆணாதிக்க கதையாக நகர்ந்து வருகிறது. இதில் குணசேகரன் திமிருடன் இருந்தாலும் இவருக்கு ஏற்ற மாதிரி மூன்று தம்பிகளும் தற்குறிகளாகத்தான் இருக்கிறார்கள்.

இவர்களிடம் மாட்டிக் கொண்டு மருமகள் சிக்கித் தவித்தார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இனிமேலும் பொருத்திருக்க முடியாது என்று பொங்கி எழுந்தவர்கள் எதிர்நீச்சல் போட ஆரம்பித்தார்கள். ஆனால் அது வெறும் வாய்சவடால் மட்டும் தான் என்று நிரூபிக்கும் வகையில் மறுபடியும் குணசேகரன் வீட்டிற்குள் வந்து முடங்கி விட்டார்கள்.

இதெல்லாம் ஒரு சீரியலா என்று மக்கள் கொந்தளிக்கும் அளவிற்கு கதைகள் இருக்கிறது. இன்னொரு பக்கம் இதுதான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசம் பார்ப்பவர்களை கண்ணீர் கலங்க வைத்துவிட்டது.

சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் போன்ற நான்கு அண்ணன் தம்பிகளின் பாச போராட்டத்தையும் ஊரில் எடுத்த அவமரியாதையை போக்குவதற்காக உள்ளே நுழைந்த நிலா ஒவ்வொன்றாக மாற்றுவதற்கு துணிந்து விட்டார். இதுதான் குடும்பம் இதுதான் வேண்டும் என்று சொல்வதற்கு ஏற்ப அய்யனார் துறை சீரியலின் கதைகளும் பாசமும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

Ayyanar thunai vs ethirneechal
Ayyanar thunai vs ethirneechal

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதில் நடித்த ஜனனி இரண்டாம் பாகத்திற்கு வர முடியாது என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு விஜய் டிவியில் புதுசாக வந்த அய்யனார் துணை சீரியலில் நிலா என்ற கேரக்டர் மூலம் அவருடைய நடிப்பை பெஸ்ட்டாக கொடுத்து சூப்பரான கதையை தேர்ந்தெடுத்து அவருடைய திறமையை காட்டி வருகிறார்.

இது போன்ற காட்சிகள் நிஜத்தில் இருக்கிறதோ இல்லையோ அட்லீஸ்ட் பார்க்கும் பொழுது நமக்கு இந்த மாதிரி ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தும் விதமாக சீரியல் இருப்பதால் அய்யனார் துணை சீரியலுக்கு பேராதரவு கிடைத்து வருகிறது.