சமந்தா போல் கவர்ச்சிக்கு மாற ஆசைப்படும் ஹீரோயின்.. அடுத்தடுத்த படங்களில் புக் செய்த அகில உலக சூப்பர் ஸ்டார்

சமந்தாவே தற்போது கவர்ச்சியை விட்டு எப்போது வெளி வரலாம் என்று இருக்கும் சூழ்நிலையில், அவரைப்போலவே கவர்ச்சி காட்ட தயாராகி உள்ளார் அந்த நடிகை. தாராள கவர்ச்சி காட்டுவதால் அகில உலக சூப்பர் ஸ்டார் அடுத்தடுத்த படங்களில் இவரை புக் செய்து உள்ளாராம்.

சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தின் மூலம் மிகவும் பரிச்சயமானவர் பிரியா ஆனந்த், இவர் கடைசியாக துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியை சந்தித்ததால் அதன் பின்பு இவருக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது.

இதனால் இதுவரை ஹோம்லி நடிகையாக இருந்த பிரியா ஆனந்த் தற்போது கவர்ச்சி காட்ட ஆரம்பித்து உள்ளார். இதனால் தற்போது இவருக்கு பட வாய்ப்பு அதிகம் வர தொடங்கியுள்ளதாம். அதுமட்டுமின்றி தற்போது பிரியா ஆனந்த் காசேதான் கடவுள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளாராம். சமந்தா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். இந்த பாடல் வேற லெவலில் ட்ரெண்டானது. ஆனால் தற்போது பிரியா ஆடி இருக்கும் ஐட்டம் பாடல் சமந்தாவையே ஓவர் டேக் செய்துவிடுமாம்.

அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பிரியா ஆனந்த் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பலரும் பின்தொடர்ந்து வருகின்றார்கள். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்திலும் பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

இவர் நடித்திருக்கும் அந்தகன் மற்றும் காசேதான் கடவுளடா படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஒரே நடிகருடன் பிரியா நடித்து வருவதால் அவருடன் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது சுமோ, காசேதான் கடவுளடா போன்று இரண்டு, மூன்று படங்களில் சிவா உடன் இணைந்து பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

priya-anand
priya-anand

இதனால் சிவா மற்றும் பிரியா ஆனந்த இணைத்து வைத்து செய்திகள் வெளியானது. மேலும் காசேதான் கடவுளடா வெளியான பிறகு பிரியா ஆனந்துக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்ட வருகிறது.