Vijay Tv: ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டது. அந்த அளவிற்கு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் வெற்றியை கொடுத்து மக்களை கவர்ந்திருக்கிறது. இதனால் விஜய் டிவியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காக இருப்பது தொகுப்பாளர்கள் மட்டும்தான்.
அப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களிடம் வெற்றிகரமாக கொண்டு போய் சேர்த்தது தொப்பளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுசு புதுசாக தொகுப்பாளர்கள் வந்து அவர்களுக்கான திறமையை காட்டி ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து விடுவார்கள்.
அப்படி சமீப காலமாக யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருப்பது தொகுப்பாளினி பிரியங்கா தான். இவர் தான் விஜய் டிவி நிகழ்ச்சியின் வெற்றிச்சின்னமாக பார்க்கப்படுகிறார். இவர் வந்துவிட்டாலே அந்த நிகழ்ச்சி ஹிட் அடித்து விடும் என்பது விஜய் டிவி சேனலுக்கு மட்டுமில்லாமல் மக்களின் மனசிலும் ஒரு முத்திரை பதிந்து விட்டது.
ஆனால் அப்படிப்பட்ட பிரியங்கா சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு விஜய் டிவி விட்டு வெளியேறி விட்டார் என்ற தகவல் கசிந்தது. அத்துடன் அவருக்கு இரண்டாவது கல்யாணம் முடிந்த நிலையில் லண்டனில் கணவருடன் சென்று செட்டில் ஆகப் போகிறார்.
அதனால் இனி விஜய் டிவி பக்கம் வரமாட்டார் என்று பேச்சுவார்த்தை வர ஆரம்பித்தது. அதற்கு ஏற்ற மாதிரி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடந்த வாரம் லட்சுமி பிரியா என்கிற காவிரி தான் தொகுத்து வழங்கினார். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டு தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்.
அதனால் இனி பிரியங்காவின் பயணம் தொடர்ந்து விஜய் டிவியில் இருக்கும். அத்துடன் விஜய் டிவி சேனலை கலர்ஸ் சேனல் வாங்கி விட்டது அதனால் பழைய நிகழ்ச்சிகளை தூக்கி விடுவார்கள் என்று தகவல் வந்த நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் நீயா நானா நிகழ்ச்சியை மட்டும் ஒதுக்க மாட்டோம் என சேனல் தரப்பிலிருந்து உறுதி அளித்து விட்டார்கள்.
ஏனென்றால் எந்த நிகழ்ச்சிகள் வந்தாலும் அது நீயா நானா நிகழ்ச்சிக்கு ஈடாக இருக்காது. அதனால் கடைசி வரை விஜய் டிவியில் கோபிநாத் ஒரு பக்க பலமாக இருந்து சப்போர்ட் கொடுப்பார்.