விஜய் டிவியிலிருந்து பிரியங்காவுக்கு கிடைத்த கல்யாண பரிசு.. சிபாரிசு செய்த அறந்தாங்கி நிஷா

Vijay Tv: விஜய் டிவி சேனலை பொறுத்த வரை யாருக்காவது ஒருத்தருக்கு கல்யாணம் நடந்து விட்டால் அவர்களை கூப்பிட்டு வைத்து கல்யாண கோலத்தில் ஒரு ஃபங்ஷனை வைத்து அவர்களுக்கு சீரும் சிறப்புமாக எல்லா விஷயங்களையும் பண்ணி கொண்டாடுவது வழக்கம்தான். இது ஆர்டிஸ்டிகளுக்கு மட்டுமில்லாமல் தொகுப்பாளர்களுக்கும் நடத்துவது உண்டு.

அப்படி டிடி கல்யாணம், பிரியங்காவின் முதல் கல்யாணம் போன்ற விஷயங்களை விஜய் டிவி சிறப்பாக செய்து வைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரியங்காவின் முதல் கல்யாணம் மனக்கசப்புடன் முடிந்த நிலையில் தற்போது டிஜே வசி என்பவரை இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டார். இது இரண்டாவது கல்யாணம் என்பதால் பிரம்மாண்டமாக நடத்தாமல் சிம்பிளாக தெரிந்தவர்களை கூப்பிட்டு முடித்து விட்டார்.

அதன் பிறகு மாப்பிள்ளை லண்டன் என்பதால் பிரியங்காவும் லண்டன் போய்விடுவார் என்று தகவல் வெளிவந்தது. அதற்கேற்ற மாதிரி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் பிரியங்கா வரவில்லை. ஆனால் அந்த ஒரு வாரம் தான் என்னுடைய பிரேக் என்று சொல்லி அடுத்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஊ சொல்றியா நிகழ்ச்சி மற்றும் ஸ்டார் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் ஊ சொல்றியா நிகழ்ச்சியை இந்த வாரம் தொகுத்து வழங்கும் போது சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதாவது இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு வெயிட் மிஷின் மெஷின் கொடுக்கப்பட்டது. அதில் ஏறி நிற்கும் போது கரண்ட் ஷாக் அடிப்பது போல் எர்த் ஆனது.

இதனால் எல்லோரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி நிஷா வந்திருந்தார். அப்பொழுது பிரியங்காவை மிஷினில் ஏறி நின்று பார்க்க சொன்னார். அப்பொழுது பிரியங்கா ஏரி நின்னு வலிக்குது என்று கத்த ஆரம்பித்து விட்டார். உடனே அறந்தாங்கி நிஷா இதுதான் உன்னுடைய கல்யாணத்திற்கு விஜய் டிவி சார்பாக கொடுத்த கல்யாண பரிசு என்று சொன்னார்.

உடனே பிரியங்காவும் நிச்சயம் இந்த வெயிட் மிஷின் ரொம்பவே தேவைப்படுகிற ஒரு விஷயம். விஜய் டிவி சார்பாக எனக்கு எந்த பரிசும் கொடுக்கவில்லை, அதனால் இதை நான் என்னுடைய கல்யாண பரிசாக எடுத்துக் கொள்கிறேன் என்று சிரித்துக் கொண்டே அந்த வெயிட் மெஷினை தூக்கிக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் பில்லர் ஆக இருக்கும் பிரியங்காவின் இரண்டாவது திருமணத்தையும் பங்க்ஷன் போல் விஜய் டிவி சேனல் நடத்தி வைப்பதற்கு பிளான் பண்ணினார்கள். ஆனால் பிரியங்கா கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டார்.