Manimegalai and Priyanga: மணிமேகலை பொருத்தவரை தன்னுடைய லட்சியத்துக்காக போராடி ஜெயிக்க வேண்டும் என்று பல இன்னல்களை சந்தித்திருக்கிறார். அந்த வகையில் எப்படியாவது சிறந்த தொகுப்பாளனியாக பெயர் வாங்க வேண்டும் என்று விஜய் டிவியில் கட்டெறும்பாக தேய்ந்து வந்தார். ஆனால் அவருக்கு அப்படி எதுவும் வாய்ப்பு கிடைக்காமல் கோமாளியாக தான் வந்தார்.
அந்த நேரத்தில் மணிமேகலைக்கு குக் வித்து கோமாளி சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தார். ஆனால் அப்படி வந்த பொழுது அதில் போட்டியாளராக பங்கு பெற்ற பிரியங்காவிற்கு மணிமேகலைக்கும் சண்டை வந்துவிட்டது. இதனால் சேனல் தரப்பில் இருந்தும் பிரியங்காவிற்கு தான் சப்போர்ட் பண்ணினார்கள்.
உடனே எனக்கு இந்த சேனலும் வேண்டாம் நிகழ்ச்சியும் வேண்டாம் என்று மனம் வெறுத்துப் போய் மணிமேகலை விலகிவிட்டார். ஆனால் அப்பொழுது பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டையால் தான் தற்போது மணிமேகலை நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.
அதாவது ஒருவருக்கு திறமை இருந்தால் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்ளலாம். அதுபோல்தான் மணிமேகலை விஜய் டிவியிலிருந்து வந்தாலும் ஜீ தமிழுக்கு போன பிறகு அவருடைய திறமையை காட்டி டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் நடுவர்களும் சப்போர்ட் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று மணிமேகலையின் பிறந்தநாளை ஒட்டி சினேகா அவருடைய அன்பை தெரிவிக்கும் விதமாக ஒரு புடவை பரிசாக கொடுத்திருக்கிறார். அத்துடன் வரலட்சுமி சரத்குமார், மணிமேகலைக்கு கண்ணாடி பரிசாக கொடுத்திருக்கிறார்.
இதையெல்லாம் தாண்டி டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், மணிமேகலைக்கு சீக்கிரமாக குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணி ஒரு தொட்டிலையும் வாங்கி கொடுத்திருக்கிறார். அத்துடன் சேனல் தரப்பில் இருந்தும் அவர்களுக்கு பரிசுகளை கொடுத்து மணிமேகலையே ஆனந்தத்தில் தள்ளி விட்டார்கள்.
இதெல்லாம் விஜய் டிவியை மணிமேகலை மிஸ் பண்ணதால் ஜீ தமிழில் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருடைய திறமையை வைத்து அடுத்தடுத்து முன்னேறி இலட்சியத்தை அடைய வேண்டும் என்று மணிமேகலையின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.