PAN India வில்லனாகும் விஜய் சேதுபதி.. கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் படக்குழு!

விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அந்தப் படத்தின் முக்கியமான வில்லனை பான் இந்தியா படத்தில் நடிக்க வைப்பதற்காக படக்குழு காத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது அவர் எப்போது கால்சீட் கொடுப்பார் என்று கால்கடுக்க காத்துக் கொண்டு இருக்கின்ற சம்பவம் கோலிவுட்டை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

அதற்கேற்றார் போல எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பு திறமையை மாஸாக வெளிகாட்டுகிறார். இதனிடையே ஏற்கனவே தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வாய்ப்புகள் பெருகி வருவதையடுத்து, பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது.

அல்லு அர்ஜுன் கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் பாகம் 2 தற்போது உருவாகயுள்ள நிலையில், விஜய்சேதுபதியை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க புஷ்பா 2 படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே புஷ்பா திரைப்படத்தில் பகத் பாசில் போலீஸ் அதிகாரியாகவும், அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகவும் நடித்திருந்த நிலையில், விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் முக்கிய போலீஸ் உயரதிகாரியாக நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழில் வெளியான சேதுபதி திரைப்படத்தில் போலீசாக நடித்த விஜய் சேதுபதி ரசிகர்களை மிரட்டியிருப்பார். இதனிடையே மீண்டும் விஜய் சேதுபதியை காக்கி சட்டையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தெலுங்கில் வெளியான உப்பெண்ணா திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த நிலையில், இரண்டாவது தெலுங்கு திரைப்படமாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் இணையவுள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் போலீஸ் வில்லனாகவும் விஜய் சேதுபதி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →