Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அதிக அளவில் டிஆர்பி ரேட்டிங்கை கொடுக்கிறது. அதனால் அவர்களுடைய முழு கவனமும் சீரியலை அதிகரித்து மக்கள் மனதில் இடம் பிடித்து அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்பதுதான். இதில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போட்டி போட்டு எக்கச்சக்கமான சீரியல்களை கொண்டு வருகிறது.
மக்களும் ஒரு சீரியலையும் விடாமல் மாத்தி மாத்தி அடுத்தடுத்த சேனல்களில் உள்ள சீரியல்களை பார்த்து வருகிறார்கள். ஒரு சேனலில் சீரியல் பார்க்கும் பொழுது விளம்பரம் போட்டால் அடுத்த சீரியலை பார்ப்பதற்கு வேறொரு சேனலுக்கு மாறுகிறார்கள். இப்படி எத்தனை சேனல்கள் சீரியல்களை கொண்டு வந்தாலும் அதை விரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு மக்கள் தயாராக இருப்பதால் புதுசாக இன்னொரு சேனலும் போட்டி போட்டு வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் சில சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சொல்லும் அளவிற்கு மக்களிடம் இன்னும் ரீச் ஆகவில்லை. ஆனால் இப்போதைக்கு மீனாட்சிசுந்தரம் என்ற சீரியல் ஓரளவுக்கு மக்களை கவர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்னொரு புது சீரியலும் வரப்போகிறது.
இந்த சீரியலை ராடன் மீடியா தயாரிப்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கப் போகிறார். இதில் ஹீரோவாக விளம்பரத்தில் புகழ்பெற்ற அணில் சவுத்ரி நடிக்கிறார். இந்த சீரியலின் தலைப்பு காத்து வாக்குல இரண்டு காதல். இந்த தலைப்புக்கு ஏற்ற மாதிரி இதில் இரண்டு ஹீரோயின்கள் கமிட்டாக இருக்கிறார்கள்.
சன் டிவியில் பாண்டவர் இல்லம் மூலம் பிரபலமான பாப்ரிகோஷ் மற்றும் லப்பர் பந்து படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த மௌனிகா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த இரண்டு ஹீரோயின்களுக்கு மத்தியில் அனல் சவுத்ரி நடிப்பதால் இந்த சீரியலுக்கு காத்து வாக்குல இரண்டு காதல் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது.