தனத்தின் ஆசையை நிறைவேற்றப் போகும் ரகுராம்.. உண்மை மறைத்ததால் வந்த பிரச்சனை

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியாராகம் சீரியலில், புவனேஸ்வரி குடும்பத்தால் வந்த பிரச்சனைகள் அனைத்தையும் மாயா யாருக்கும் தெரியாமல் தனி ஆளாக நின்னு சமாளித்து ரகுராம் குடும்பத்தில் இருப்பவர்களை காப்பாற்றி விட்டார். ஆனால் மாயா செய்த உதவி நன்மைதான் முடிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாத ரகுராம், மாயாவை ஒதுக்கி வருகிறார்.

அத்துடன் மாயாவுடன் சேர்ந்து உதவி பண்ணி தனத்தின் வாழ்க்கையை காப்பாற்றிய கதிருக்கும் கடைசியில் கெட்ட பெயர் தான் கிடைத்தது. ஆரம்பத்தில் மாயா கதிரை புரிந்து கொள்ளாத ஜானகி மற்றும் தனம் உண்மை தெரிந்து கொண்ட பின் மாயா கதிருக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் கதிருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட தனம் விளையாட்டில் ஜெயித்து விட்டு ரகுராமிடம் கதிருடன் சேர்ந்து வாழ்வதற்கு எனக்கு முழு சம்மதம் என்று அவருடைய ஆசையை தெரியப்படுத்தினார். ஆனால் ராகுராம் கதிர் கெட்டவன் என்ற நினைப்பில் தனம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனால் வேறு வழி இல்லாமல் கதிர் மற்றும் தனம் வீட்டை விட்டு தனியாக போய்விட்டார்கள். பிறகு வீட்டு செலவுக்காக படம் தேவைப்படும் என்பதால் கதிர் கொத்தனார் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார். இதை தெரிந்து கொள்ளாத தனமும் கதிர்காக அந்த இடத்தில் கொத்தனார் வேலையை பார்ப்பதற்கு வந்து விட்டார்.

பிறகு இருவரும் சந்தித்த நிலையில் சொன்னது என்னவென்றால் நீ இப்படி கஷ்டப்பட்டு வேலை பார்ப்பது கதிரின் மனைவி என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ரகுராமின் மகள் இவ்ளோ கஷ்டப்படுகிறாள் என்று தான் சொல்வார்கள். அது உனக்கும் சரியில்லை மாமாவுக்கும் நல்லது இல்லை என்று சொல்லி தனத்தை கூட்டிட்டு போய் விடுகிறார்.

அடுத்ததாக தனம் ஜெயித்ததால் அந்த ஊரில் உள்ள மக்களுக்கு பெருமை என்பதற்காக மரியாதை செலுத்தும் விதமாக ஒரு ஏற்பாடு செய்கிறார்கள். இதில் கலந்து கொள்ள வருமாறு ஊர் மக்கள் அனைவரும் ரகுராம் வீட்டிற்கு வந்து அழைக்கிறார்கள். அந்த வகையில் இந்த விழாவிற்கு ரகுராம் தன்னை வாழ்த்த வருவார் என்று ஆசையுடன் தனம் காத்துக் கொண்டிருக்கிறார்.

அதே மாதிரி இந்த விழாவில் மற்றவர்களும் கலந்து கொள்ளும் விதமாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வந்து விடுகிறார்கள். அந்த வகையில் ரகுராமும் வகைக்கு பாராட்டு விழா நடப்பதை பார்க்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் தெரியாமல் கலந்து நடனத்தின் ஆசையை நிறைவேற்றுவார். ஆனால் இவ்வளவு பிரச்சனைக்கும் ஒரே ஒரு காரணம் மாயா எந்த உண்மையையும் யாரிடமும் சொல்லாமல் இருப்பது தான்.