சந்தியா ராகம் சீரியலில் இழந்த மரியாதையை திரும்பப் பெற்ற ரகுராம்.. பத்மா பார்வதிக்கு ஆப்பு வைத்த ஜானகி

Sandhiya ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ரகுராமுக்கு மாயா மற்றும் கதிர் மீது இருந்த கோபம் இன்னும் குறையவில்லை. ஆனாலும் அவங்க மீது தவறு இல்லை என்பதை உணரும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக ரகுராம் மனசு மாறி வருகிறது.

கார்த்தி இறந்துவிட்டான், அவனை கொலை செய்தது கதிர் தான் என்று தவறாக புரிந்து கொண்ட ரகுராமுக்கு கார்த்திக் இறக்கவில்லை, இதெல்லாம் புவனேஸ்வரியின் சூழ்ச்சி என்று மாயா புரிய வைத்துவிட்டார்.

அதனால் பிரச்சனையிலிருந்து வெளிவந்த ஜானகியை ரகுராம் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார். ஆனாலும் தனம் மீது கோபத்துடன் இருந்த ரகுராம் யாருக்கும் தெரியாமல் மகள் ஆசையாக செய்த இனிப்பை தெரியாமல் சாப்பிட்டு சந்தோஷப்பட்டு கொண்டார்.

இதனை பார்த்த ஜானகியும் மகள் மீது இன்னும் பாசம் குறையவில்லை என்று ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டார். அத்துடன் எதற்காக கதிர் தாலி கட்டினார், மாயா மறைத்து வைத்திருந்த ரகசியமும் தெரிந்து விட்டால் ரகுராம், மாயாவை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டு ஒன்று சேர்ந்து விடுவார்.

இதற்கிடையில் ரகுராம் ஊர் மரியாதை பொறுப்பே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் அந்த பொறுப்பு புவனேஸ்வரி கையில் போகக்கூடாது என்று மாயா, சிவராமனை பஞ்சாயத்து தலைவராக ஏற்க வைத்தார்.

தற்போது பிரச்சினைகள் எல்லாம் சரியான பிறகு சிவராமன், அண்ணன் தான் பஞ்சாயத்து தலைவராக இருக்க வேண்டும் என்று ஊர் தலைவர்கள் அனைவரும் சொல்லிய நிலையில் ரகுரமும் அதை ஏற்றுக் கொண்டார். அத்துடன் சிவராமன், வீட்டுப் பொறுப்பும் தலைவியாக இருக்க வேண்டிய அதிகாரமும் ஜானகி அண்ணி தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி பார்வதி வைத்திருந்த கொத்துச்சாவியை ஜானகிடம் வாங்கிக் கொடுத்து விடுகிறார்.

இனிமேல் தான் பார்வதி பத்மாவிற்கு ஆட்டம் இருக்கிறது என்பதற்கு ஏற்ப ஜானகி மூலம் மாயா திருவிளையாடல் காட்டப் போகிறார். அத்துடன் அந்த 40 லட்ச ரூபாய் என்ன ஆச்சு என்ற விஷயமும் மாயா கண்டுபிடித்து விடுவார். இனி ஒவ்வொரு விஷயங்களும் ரகுராமுக்கு புரிய வரும்.