சக்திவேல் செய்யும் சூழ்ச்சியால் உண்மையை சொல்லும் ராஜி.. அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் பிசினஸ்க்காக உதவி செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணிய ராஜி, அவரிடம் இருக்கும் நகையை அடகு வைத்து பணத்தை கொடுப்பதற்கு தயாராகி விட்டார். அதனால் ராஜி, மீனாவை கூப்பிட்டு வங்கிக்கு போகிறார். ஆனால் வங்கியில் நேரம் ஆகும் என்பதால் மீனாவுக்கு ஆபீஸ் டைம் ஆகிவிட்டது என்று கிளம்பி விடுகிறார்.

பிறகு அங்கே இருந்து ராஜி அடகு வைத்து பணத்தை வாங்கும் பட்சத்தில் சக்திவேல் அந்த வங்கிக்கு போய் விடுகிறார். உடனே ராஜி வந்த காரணத்தை தெரிந்து கொண்டு அந்த நகையை வாங்கி பார்க்கிறார். இது நம்ம வீட்டு நகையா ஆச்சு, இது எப்படி ராஜி விற்கலாம். இந்த விஷயத்தை வைத்து பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று சக்திவேல் முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் வங்கியின் மேனேஜர் மூலம் ராஜிடம் சாயங்காலம் வந்து பணத்தை வாங்கிட்டு போக சொல்லுங்க என சொல்லி அனுப்ப சொல்கிறார். உடனே ராஜியும் மேனேஜர் சொல்வதை நம்பி வீட்டுக்கு போய் விடுகிறார். பிறகு வங்கியில் இருந்து நகையை சக்திவேல் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து முத்துவேல் மற்றும் குடும்பத்தின் முன் சொல்கிறார்.

இதை வைத்து பிரச்சினை பண்ணும் விதமாக பாண்டியன் வீட்டு வாசலில் நின்னு கத்துகிறார். உடனே ராஜி கதிர் மற்றும் கோமதி அனைவரும் வந்து என்னாச்சு என்று கேட்ட பொழுது பாண்டியனை வர சொல்லுங்க நான் பேச வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்கிறார். உடனே கோமதி, பாண்டியனுக்கு போன் பண்ணி வர சொல்லுகிறார்.

இந்த சமயத்தில் ராஜிக்கு நகை விஷயம் சித்தப்பாவுக்கு தெரிந்து விட்டது, அதை வைத்து தான் பிரச்சனை பண்ணுகிறார் என்று புரிந்து கொண்டார். உடனே பயத்தில் மீனாவுக்கு நடந்த விஷயத்தை சொல்கிறார். மீனா நீ பயப்படாமல் இரு நான் உடனே வருகிறேன் என்று ஆபீஸ்ல இருந்து கிளம்புகிறார்.

அந்த வகையில் சக்திவேல் இந்த நகை விஷயத்தை வைத்து பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்த போகிறார். இதனால் வேற வழி இல்லாத ராஜி, உண்மையை சொல்லும் விதமாக நான் கண்ணனை தான் நம்பி நகை பணத்தை எடுத்துட்டு போனேன். கதிருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் கண்ணன் நகைக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு என்னை விட்டுட்டு போய்விட்டான்.

அந்த நேரத்தில் நான் தற்கொ**லை பண்ணலாம் என்று போகும்பொழுது அத்தை தான் என்னை காப்பாற்றி கதிரை என் கழுத்தில் தாலி கட்ட சொன்னார். என்னுடைய வாழ்க்கையும் நம்முடைய குடும்ப மானத்தையும் காப்பாற்ற அத்தை அப்படி ஒரு முடிவை எடுத்தாங்க என்று நடந்த உண்மை எல்லாம் சொல்லப் போகிறார். இதைக் கேட்டதும் பாண்டியன் குடும்பத்தில் அதிர்ச்சியாக இருக்கப் போகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட முத்துவேல் திருந்தி விடுவார்.