Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், படிக்காமல் பணம் இருந்தால் போதும் அரசாங்க உத்தியோகத்தை வாங்கிவிடலாம் என்பதற்கு உதாரணமாக செந்திலுக்கு வேலை கிடைத்துவிட்டது. இது தவறானதாக இருந்தாலும் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் கதிர், இந்த சந்தோஷத்தை ராஜியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது கதிருக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் பண்ணி திருட்டுப் போன நகை விஷயமாக பேச வேண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார். உடனே ராஜி மற்றும் கதிர் இரண்டு பேரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விடுகிறார்கள். அங்கே கண்ணன், ராஜியை ஏமாற்றின மாதிரி மற்ற ஊரிலும் சில பெண்களை ஏமாற்றி நகையை திருடி இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்து விட்டது.
உடனே இவரை பிடித்து உங்கள் நகையையும் நாங்கள் கைப்பற்றி விட்டோம் என்று ராஜியின் நகைகளை கொடுக்கிறார்கள். ஆனால் அதில் பாதி நகை தான் இருக்கிறது என்பதால் மீதி நகையை விசாரணை செய்து கூடிய சீக்கிரத்திலே கொடுத்து விடுகிறோம் என்று சொல்லிவிடுகிறார். பிறகு ராஜி, நகை வாங்கிக்கொண்டு கதிருடன் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்.
வரும்பொழுது கண்ணன் ஏமாற்றிய விஷயத்தைச் ராஜி கோபமாக பேசிக்கொண்டு வருகிறார். அப்பொழுது கதிர், இந்த நகையை சித்தப்பாவிடம் கொடுத்து உங்க வீட்டில் கொடுக்க சொல்லிவிடு என்று சொல்கிறார். அதற்கு ராஜி, அப்படி கொடுத்தால் இந்த நகை இப்பொழுது எங்கு இருந்து வந்தது என்ற கேள்வி கேட்பாங்க என கேட்கிறார். அதெல்லாம் கேட்க மாட்டாங்கள் அவங்க நகையை பார்த்தால் சந்தோஷம் என்று வாங்கிக் கொள்வார்கள் என கதிர் சொல்கிறார்.
அடுத்ததாக கதிர் லோன் விஷயமாக பேங்க் மேனேஜரை பார்த்து பேசுவதற்காக கிளம்புகிறார். உடனே ராஜி நானும் வருகிறேன் என்று சொல்லி இரண்டு பேரும் சேர்ந்து பேங்குக்கு லோன் விஷயமாக பேசுகிறார்கள். அப்பொழுது யாராவது ஷுரிட்டி கையெழுத்து போட வேண்டும் அல்லது நகையை வைத்து லோன் வாங்கலாம் என சொல்கிறார். ஆனால் இது எதுவும் இல்லை என்று கதிர் சொல்லிய பொழுது ராஜி அவரிடம் இருந்த நகையை கொடுத்து கதிரின் லோனுக்கு உதவப் போகிறார்.
அந்த வகையில் செந்திலை தொடர்ந்து அடுத்து கதிர் டிராவல்ஸ் பிசினஸ் ஆரம்பித்து ஒரு தொழில் அதிபராக வளர்ச்சி பெறப்போகிறார். கடைசியில் சரவணன், அப்பா கடையிலிருந்து பாண்டியனுக்கு உதவியாக இருக்கப் போகிறார்.