குக் வித்து கோமாளியில் சைடு கேப்பில் சிக்சர் அடிக்கும் ராஜு.. வெளியேறிய சௌந்தர்யா

Cook With comali: குக் வித் கோமாளி சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்கள் தான் ஆகியிருக்கிறது. ஆனாலும் அதற்குள் ரசிக்கும் படியாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பதால் மக்கள் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் மூன்றாவது வாரமாக ஆரம்பிக்கப்பட்ட பேரிங் நிகழ்ச்சியில் எதிர்பார்க்கப்படாதபடி பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.

அதாவது நேற்றைய எபிசோடில் குக்குகளும் கோமாளிகளும் பேரிங் செய்யும் முறை நடந்திருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு குக்கும் டெலிபோன் பூத்தில் போன் செய்து கோமாளிகளிடம் பேசிய பொழுது அந்த கோமாளிகள் குரலை வைத்து கண்டுபிடித்து அவர்கள் வேண்டுமென்றால் ஒரு பெல் அடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

அப்படி அடித்து விட்டால் அந்த குக்குக்கு கோமாளிகள் வந்து உதவி செய்வார்கள். இதில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு யோகியும், உமையருக்கு சுனிதா, சுந்தரிக்கு பூவையார் என்று ஒவ்வொரு கோமாளிகள் கிடைத்துவிட்டார்கள். ஆனால் பிக் பாஸ் ராஜூ மட்டும் எனக்கு தங்கதுரை தவிர வேறு யாரு வந்தாலும் சந்தோஷம் என்று சொல்லியிருந்தார்.

ஆனால் அவருடைய சொல்லுக்கு எதிர்மறாக தங்கத்துரையை கிடைத்துவிட்டார். ராஜூ அப்படி சொன்னதற்கு காரணம் என்னவென்றால் தங்கதுரை மொக்க ஜோக் சொல்லி சமையல் செய்ய விடாமல் தொந்தரவு செய்ததால் டேஞ்சர் ஜோனுக்கு வந்து விடுகிறேன் என்று ராஜு சொல்லி இருக்கிறார். அத்துடன் நேற்றைய போட்டியில் கம்மியான புள்ளிகளை பெற்று கோமாளி சீசனை விட்டு வெளியேறுது யாரென்றால் youtube மூலம் பிரபலமான சௌந்தர்யா.

இதற்கிடையில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பெஸ்ட் குக் என்று பெயரை பெற்றது பிரியா ராமன் தான். இதனால் கடுப்பான ராஜூ, பிரியா மேடம் தான் நல்ல சமைக்கிறாங்க. எப்படியும் அவங்க தான் வின் பண்ணுவாங்க. அதனால் பேசாமல் வின்னர் பரிசு அவர்களிடம் கொடுத்துவிட்டு இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சம்பளத்தையும் கட் பண்ணி விடுங்க என ஜோக்காக சொல்லி மனதில் இருக்கும் பாரத்தை குறைக்கும் விதமாக சைடு கேபிள் ராஜு அவருடைய ஸ்கோரை ஏற்றிக் கொண்டு வருகிறார்.