Cook with Comali 6: சினிமாவை பொறுத்தவரை மக்களிடம் முதலில் ரீச் ஆகவேண்டும், அதன் பின் திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து வெற்றியை நோக்கி பயணிப்பது தான் வழக்கம். அந்த வகையில் விஜய் டிவி மிகப்பெரிய உதவி பண்ணும் விதமாக எக்கச்சக்கமான கலைஞர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்து அவர்கள் மக்களிடம் பிரபலமாகி அடுத்த கட்ட லெவலுக்கு போயிருக்கிறார்கள்.
அந்த வகையில் சமீப காலமாக விஜய் டிவியின் வெற்றி சின்னமாக பார்க்கப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜு, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஜெயித்து டைட்டிலை கைப்பற்றினார். ஆனாலும் ராஜுக்கு பெருசாக சொல்லும் படி இந்த வெற்றி அவரை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போகவில்லை.
டைட்டில் வின் பண்ணிய பிறகும் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு அவரே இயக்கி எழுதி ஒரு வெப் சீரிஸ் மூலம் வந்தார். ஆனாலும் அது பெருசாக எடுபடவில்லை. அடுத்ததாக பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படமும் முழுக்க முழுக்க அவருக்கு ஏற்ற மாதிரி காமெடியாக தான் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சில பல காரணங்களால் அந்த படமும் வெளியிட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் படம் வெளிவருவதற்குள் மக்கள் ராஜுவை மறந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பிளாட்பார்ம் தேவைப்பட்டது. அதுக்காகத்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அவர் கூறியிருக்கிறார்.
இதன் மூலமாவது இன்னும் மக்களை ரீச்சடைந்து அவருடைய படம் ரிலீஸ் ஆகும் பொழுது அவருக்கு கை தூக்கி விடும் என்ற நம்பிக்கையில் இந்த நிகழ்ச்சியை ஒரு படிகற்களாக பார்த்து போட்டியாளராக பங்கேற்க வந்திருக்கிறார்.