வீரா சீரியலில் பிருந்தாவுக்கு ஆறுதலாக நிற்கும் ராமச்சந்திரன்.. விஜிக்கு வேட்டு வைக்கும் மாறன்

Veera: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி பொய் சொல்லிட்டு தான் குடும்பத்திற்குள் நுழைந்து இருக்கிறார் என்று ராமச்சந்திரனுக்கு தெரிந்து விட்டது. அதனால் விஜியையும் அவருடைய அம்மாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விட்டார். ஆனால் ராமச்சந்திரன் குடும்பத்தில் இருந்தால் தான் எல்லோரையும் பழி வாங்க முடியும் என்று நினைக்கும் விஜி போகும்பொழுது ஒரு டிராமாவை போடுகிறார்.

அதாவது மயக்கம் போட்டு விழுவது போல் நடிக்கிறார். அப்பொழுது ராமச்சந்திரன் டாக்டரை வர சொல்லி விஜிக்கு என்ன பிரச்சனை என்று பார்க்கச் சொல்கிறார். டாக்டர் விஜிய்யின் ஆள் என்பதால் விஜி கர்ப்பம் என்று பொய் சொல்லி விடுகிறார். இதனால் ராமச்சந்திரன் வள்ளி, விஜியின் கர்ப்பத்திற்கு கார்த்திக் காரணம் என்று நம்பி விஜயை வீட்டுக்குள் தங்க வைப்பதற்கு முடிவு பண்ணி விடுகிறார்கள்.

ஆனால் பிருந்தா இந்த அதிர்ச்சியை கேட்டு கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார். கார்த்திக் என் மீது எந்த தவறும் இல்லை, விஜி பொய் சொல்லுகிறார் என்று சொன்னாலும் பிருந்தா நம்பவில்லை. அதனால் கண்ணீருடன் அழுது கொண்டிருக்கும் பிருந்தாவுக்கு ஆறுதலாக ராமச்சந்திரன் பேசுகிறார். அப்படி பேசிட்டு வரும் பொழுது ராமச்சந்திரனை கவிழ்க்கும் விதமாக விஜி, என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நான் இப்பொழுதே பெயர் வைத்து விட்டேன்.

ஆண் குழந்தையாக இருந்தால் என் மாமனார் பெயரான ராமச்சந்திரன் என்றும், பெண் குழந்தை என்றால் மாமியார் பெயர் காவிரி என்றும் வச்சால்தான் ராசியாக இருக்கும் என்று நான் இப்பொழுது முடிவு பண்ணி விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ராமச்சந்திரனும் விஜி கர்ப்பம் என்று நம்பி விடுகிறார். ஆனால் விஜி பொய்யாக தான் டிராமா போடுகிறார் என்று மாறன் வீராவுக்கு தெரியும்.

அதனால் கூடிய சீக்கிரத்தில் விஜி போடும் டிராமாவுக்கு வேட்டு வைக்கும் விதமாக மாறன் வீரா உண்மையை கண்டுபிடிக்க போகிறார்கள். அப்பொழுது மொத்தமாக விஜி தோற்றுப் போய் இந்த வீட்டை விட்டு வெளியேறுவார்.