Raveena: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீசன் 2 சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ரவீனா நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அத்துடன் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2, சூப்பர் சிங்கர் சீசன் 9, குக்கு வித்து கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அந்த வகையில் கிட்டத்தட்ட 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து பிரபலமானார். அப்படிப்பட்டவர் சிந்து பைரவி என்ற சீரியல் மூலம் நடிப்பதற்கு மறுபடியும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஒரு வாரம் சூட்டிங் சென்று ப்ரோமோ எல்லாம் வெளிவந்த பிறகு, அந்த கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை என்று சூட்டிங் வர மறுத்து விட்டார்.
இதனால் சிந்து பைரவி நாடகத்தின் தயாரிப்பாளர் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாருக்கு சரியாக பதில் அளிக்காததால் ரவீனாவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு வருஷத்துக்கு எந்த சீரியலிலும் நடிக்க கூடாது என்று ஒதுக்கப்பட்டிருந்தார்.
ஆனாலும் இன்று நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலுக்கு ஓட்டு போட வந்திருக்கிறார். அப்படி வந்த பொழுது ரெட் கார்டு வாங்கியதால் ஓட்டு போட உரிமையும் இல்லை என்று ரவீனாவை ஒதுக்கி விட்டார்கள். இதனால் ரவீனா, இந்த பிரச்சினையை பெருசாக்கும் விதமாக நடிக்க தான் கூடாது என்று ரெட்கார்டு கொடுக்கப்பட்டது.
ஆனால் ஓட்டு போட உரிமை எல்லோருக்கும் உண்டு, அப்படி இருக்கும்பொழுது எனக்கு ஏன் ஓட்டு போட உரிமை இல்லை என்று சொன்னதால் சர்ச்சையாகிவிட்டது. இந்த விஷயம் தற்போது சின்னத்திரையில் பூகம்பத்தை கிளப்பி வருகிறது.
இது சம்பந்தமாக முன்னாள் சின்னத்திரை சங்க தலைவர் கொடுத்த விளக்கம் என்னவென்றால் ரெக்கார்டு கொடுக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி ஓட்டு போட உரிமையும் இல்லை என்று பதில் கொடுத்து இருக்கிறார்.