கர்மா சும்மா விடுமா.. விஜய் டிவியின் பரிதாப நிலைக்கு இது காரணமா.?

Vijay Tv : விஜய் டிவியில் எப்படியாவது சேர்ந்து விட்டால் போதும் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை எட்டி விடலாம் என்பது பலரின் கனவு. அதை விஜய் டிவியும் பலமுறை சாதித்து காட்டி இருக்கிறது.

சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றோர் விஜய் டிவியின் பிள்ளைகள் தான். விஜய் டிவி தற்போது நிதி நெருக்கடி காரணமாக கலர்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர், நீயா நானா போன்றவை ரத்து செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் டிவியின் பரிதாப நிலைக்கு இதுதான் காரணமா என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

விஜய் டிவியின் பரிதாப நிலைக்கு காரணம்

அதாவது கடந்த வருடம் விஜய் டிவிக்கு பல நிகழ்ச்சிகளை கொடுத்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனத்துடன் மனக்கசப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொடுத்திருந்தது.

ஆனால் விஜய் டிவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீடியா மேசன்ஸ் சன் டிவிக்கு சென்றது. அதில் பணியாற்றிய வெங்கடேஷ் பட் போன்ற பிரபலங்களும் சன் டிவிக்கு சென்று விட்டனர். டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியை இந்நிறுவனம் தயாரித்தது.

அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போதும் விஜய் டிவி பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறு விஜய் டிவி ஒவ்வொரு முறையும் ஒருதலை பக்கமாக இருந்ததால் அதன் கர்ம வினை தான் இவ்வாறு நடந்துள்ளதாக கூறி வருகிறார்கள். மிக குறுகிய காலத்தில் விஸ்வரூப எடுத்த விஜய் டிவி இப்போது இந்த நிலையில் இருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.