சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது என்னதான் போர் அடித்தாலும் சரியான அந்த நேரத்தில் நம்முடைய மனதில் ஆட்டோமேட்டிக்கா ரிமோட்டை எடுத்து அதை தான் பார்க்க சொல்கிறது. அதுதான் இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய கிடைத்த வெற்றி. ஆனால் தொடர்ந்து ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு இருந்தால் பார்ப்பவர்கள் ரொம்பவே கடுப்பாகி விடுவார்கள்.
குணசேகரனுக்கு எங்கே நம்மளை மீறி ஆதிரை திருமணம் ஜனனி நினைத்தபடி கல்யாணத்தை நடந்திடுமோ என்ற பயத்தினால் மற்றவர்களை இவர் பக்கத்தில் கூட்டு சேர்க்கும் விதமாக ஞானத்திடம் செண்டிமெண்டாக பேசி சத்தியத்தை வாங்கி விடுகிறார். அவருக்கு எவ்வளவு அசிங்கப்பட்டாலும் ஞானம் மட்டும் வரவே மாட்டேங்குது. ஆனா இவரை வச்சு ஒன்னும் ஆகப் போறது இல்லை. ஞானம் நாடகத்தை பொருத்தவரை டம்மி பீஸ் தான்.
அடுத்து ஜான்சி ராணி கரிகாலன் நிலைமை பார்த்து ஆக்ரோஷமாகி எஸ் கே ஆர் குடும்பத்தை உண்டு இல்லைன்னு ஆக்காமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக போகிறார். இதை பார்த்து மிகவும் கடுப்பான கதிர், ஜனனி நந்தினி மற்றும் சக்தியை நடுத்தெருவில் விட்டுவிட்டு நீங்க எப்படியும் வாங்க இல்லையென்றால் நடந்து வாங்க என்று சொல்லி ஆதரையை கூட்டி போய்விடுகிறார்.
இவர்களும் வழக்கம் போல் புலம்பிக்கொண்டே வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அடுத்ததாக கதிர் நடந்த விஷயத்தை அனைத்தையும் குணசேகரனிடம் சொல்கிறார். அதோடு அவரை உசுப்பேத்தும் விதமாக ஜனனியின் சக்தியும் தாறுமாறாக பேசி அசிங்கப்படுத்துகிறார். இதெல்லாம் கேட்டு பொறுமையா இருந்த குணசேகரன், கதிரை இதுக்கு என்ன பணணமோ அதை நான் பார்த்துக்கிறேன் நீ பேசாம போய் படு என்று சொல்லி விடுகிறார்.
அதற்கு கதிர் படுத்தால் எனக்கு தூக்கம் வராது சொல்ல குணசேகரன் எது சாப்பிட்டால் தூக்கம் வருமோ அதை சாப்பிட்டு போய் படு என்று நக்கலாக சொல்கிறார். பிறகு குணசேகரன் இந்த கல்யாணத்தில் யார் மூலமாக பிரச்சனை வந்தாலும் சரி நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்கிறார்.
அதற்கு சக்தி யாரை மிரட்டி பாக்குறீங்க என்று கேட்கிறார். ஆனால் சக்தி ஜனனியை விட டபுள் மடங்கு ரேணுகா குணசேகரனை வைத்து வாங்குகிறார். இதை பார்க்கும் பொழுது ஜனனியை விட ரேணுகா எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. அவரால் பெரிதாக எதுவும் பண்ண முடியாமல் விட்டாலும் அப்பப்பம் குத்தி காட்டி பேசி விடுகிறார். இந்த ரேணுகா, நந்தினி மற்றும் குணசேகரன் இவர்களுக்காகவே இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் தான் அதிகம்.