Actor Robo Shankar: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் சின்னத்திரையில் கிடைத்த பிரபலத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். பெரிய ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மிகவும் மெலிந்து போய் ரோபோ சங்கரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தது. இதற்கான காரணம் இணையத்தில் உலாவ தொடங்கியது. அதாவது ரோபோ சங்கர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ரோபோ சங்கரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சிலர் பேட்டிகள் கொடுத்து வந்தனர். இப்போது மீண்டும் ரோபோ சங்கர் நேரடியாக கம்பேக் கொடுத்திருக்கிறார். பழையபடி அவரது பேச்சில் நகைச்சுவை இல்லை என்றாலும் தான் கடந்து வந்த நாட்களைப் பற்றி கூறியுள்ளார்.
அதாவது உண்மையாகவே தனக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும், படத்திற்காக உடல் எடை குறைக்கும் போது பிரச்சனை ஏற்பட்டதாக கூறி இருக்கிறார். ஆனால் என்னுடைய அத்தியாயமே முடிந்து விட்டதாக சிலர் சந்தோஷப்பட்டனர். எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் நான் மீண்டு வந்திருக்கிறேன்.
மேலும் தனக்கு இருக்கும் பிரச்சனையை விட கொடுமையாக நான் அனுபவித்தது தன்னை பற்றி இணையத்தில் வெளியான விமர்சனங்கள் தான். இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவரைப் பற்றி தவறான செய்திகள் வந்து மேலும் புண்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
மேலும் எங்கள் மகளின் திருமணம் விரைவில் நடக்க இருப்பது உண்மைதான். அதை பற்றிய செய்தியை நாங்களே அறிவிப்போம் என ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் கூறியுள்ளார்கள். இப்போது ரோபோ சங்கர் பழையபடி மீண்டு வந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.