விஜயாவால் கதறி அழும் ரோகினி.. முத்து மீது விழுந்த பழி, சூடு பிடிக்கும் சிறகடிக்கும் ஆசை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா பிரச்சனை முடிந்து விட்டது என்று கண்ணசைந்து ஓய்வெடுக்கிறார். அந்த நேரத்தில் க்ரிஷ் வந்து விஜயாவை பயமுறுத்தும் அளவிற்கு கத்தி விளையாட ஆரம்பிக்கிறார். இதனால் பதட்டமான விஜயா, க்ரிசை வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பிக்கிறார். அப்பொழுது எல்லோரும் க்ரிஷுக்காக சப்போர்ட் பண்ணி விஜயாவிடம் பேசுகிறார்கள்.

ஆனால் மனோஜ் மட்டும் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கிருஷ்வை அடிக்கப் போகிறார். உடனே ரோகிணி, மனோஜ் கையை பிடித்து தடுக்கிறார். எல்லோரும் அமைதியாக ஆச்சரியமாக பார்த்த நிலையில் ரோகிணி அவன் சின்ன பையன் அவன போய் ஏன் அடிக்கிறாய் என்று கேட்கிறார். உடனே இந்த பிரச்சினையை சமாளிக்கும் விதமாக அண்ணாமலை, விஜயாவை திட்டி விடுகிறார்.

அந்த சமயத்தில் பார்வதி பதட்டமாக வீட்டிற்குள் வந்து ரதி தீபன் வீட்டில் வந்து பிரச்சனை பண்ணி 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டின விஷயத்தை சொல்கிறார். உடனே இதற்கெல்லாம் காரணம் மனோஜ் தான் என்று முத்து சொல்கிறார். அதற்கு மனோஜ் இந்த ஐடியாவை கொடுத்தது ரோகிணி தான் என்று சொல்கிறார். உடனே விஜயா இது தான் சான்ஸ் என்று அவங்க கிட்ட 10 லட்ச ரூபாயை நீ ரெடி பண்ணி கொடுத்து விடு என்று ரோகினிடம் சொல்லிவிடுகிறார்.

இதனால் பணத்துக்கு நான் என்ன பண்ணுவது என்று தெரியாமல் ரோகிணி அழுகிறார். ரோகிணிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக மீனா பேசுகிறார். அடுத்து மொட்டை மாடியில் இருந்து மனோஜும் ரொம்ப பீல் பண்ணி அழுது ரவியிடம் சொல்லுகிறார். அங்கே வந்த முத்துவிடம் உதவி கேட்கும் விதமாக இந்த பிரச்சினையை எப்படியாவது முடித்துவிடு. என்னால் பணம் கொடுக்க முடியாது. ரோகினி இடமும் அவ்வளவு பணம் இல்லை என்று கெஞ்சுகிறார்.

உடனே முத்து சரி நான் பார்க்கிறேன் என்று இந்த பிரச்சனை முடிப்பதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் ரதி தீபன் வீட்டுக்கு போன முத்து சமாதானம் ஆகிவிட்டு இப்பொழுது ஏன் பணம் கேட்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற சொல்லிய நிலையில் முத்து கோவப்பட்டு அடிக்க ஆரம்பித்துவிட்டு உங்களை நான் சும்மா விடமாட்டேன் என்று கிளம்பி விடுகிறார்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட லோக்கல் ரவுடி சிட்டி, ரதி தீபன் குடும்பத்தில் இருப்பவர்களை அடித்து விட்டு அந்த பழியை முத்து மீது போட்டு விடுகிறார்கள். அந்த வகையில் ரதி தீபன் பெற்றோர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று முத்து மீது கம்ப்ளைன்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் போலீஸ், முத்து வீட்டுக்கு வந்து முத்துவை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார்கள். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் விதமாக முத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.