Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா செஞ்ச நல்ல காரியத்தால் முத்து பிரச்சனையிலிருந்து தப்பித்து விட்டார். டிராபிக் போலீஸ் அருண், முத்து மீது இருந்த கோபத்தை தீர்க்கும் விதமாக பழிவாங்க பிளான் பண்ணினார். ஆனால் மீனா கெஞ்சியதால் கான்ஸ்டபிள் உண்மையை சொல்லி முத்துவை காப்பாற்றி விட்டார்.
இந்த சந்தோஷத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லும் விதமாக முத்து என் மீது எந்த தப்பும் இல்லை என்று போலீஸ் என்னை விட்டு விட்டாங்க. என் காரும் திரும்ப கிடைத்து விட்டது, கேன்சல் பண்ணிய லைசென்ஸ் கேன்சல் பண்ணி விட்டார்கள் என்று சந்தோசமாக சொல்லுகிறார். ஆனாலும் என்னுடைய காரில் பிரேக் ஒயர் கட் ஆய் இருக்கிறது.
இதை வேண்டுமென்று யாரோ கட் பண்ணி இருக்காங்க, அப்படி கட் பண்ணனும்னா என்னுடைய கார் சாவியை எடுத்து தான் கட் பண்ணி இருக்க வேண்டும். அந்த வேலையை இந்த வீட்டில் இருப்பவர்கள் தான் யாரோ பண்ணி இருக்காங்க என்று சந்தேகமா ரோகிணி பார்த்து சொல்கிறார். உடனே ரோகிணி, நான் எதுவும் பண்ணவில்லை, ஆணில் மாட்டிய சாவியை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.
ரோகிணி இப்படி உளறுவதை பார்த்ததும் முத்துவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆனாலும் ரோகிணி இதை ஈசியாக சமாளித்து விடுவார். இருந்தாலும் இன்னொரு விஷயத்தில் சிக்க போகிறார். அதாவது சம்பந்தமே இல்லாத ஒரு நபர் சிட்டி இடம் திருட்டு நகையை கொடுத்து ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டார். அந்த நகையை சிட்டி ரோகினிடம் கொடுத்து பணத்தை வாங்கலாம் என்று முடிவு பண்ணி ரோகிணிக்கு ஆசை காட்டி விட்டார்.
ரோகிணியும் கம்மியான விலையில் இந்த நகை கிடைக்கிறது, இந்த நகையை நாம் வாங்கிவிட்டு பேராசை பிடித்திருக்கும் விஜயாவிடம் கொடுத்து விட்டால் நம் மீது இருக்கும் கோபம் குறைந்து விடும் என்று பிளான் பண்ணி விட்டார். ஆனாலும் கையில் காசு இல்லாததால் வித்யாவுக்கு போன் பண்ணி விவரத்தை சொல்லி பணம் கேட்கிறார். வித்யாவிடமும் பணம் இல்லை என்று சொல்லிய நிலையில், வித்யாவை கல்யாணம் பண்ண போகும் முருகனிடம் பணம் இருக்கிறதை தெரிந்து கொண்ட ரோகிணி அவரிடம் கேட்டு வாங்கித்தா என சொல்கிறார்.
வித்யாவும் ரோகினிக்கு அவசர செலவுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று முருகனிடம் கேட்க போகிறார். முருகன் வீடு வாங்கும் வைத்திருக்கும் பணத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கப் போகிறார். இது முருகன் மூலமாக முத்துவிற்கு தெரிய வரும் பொழுது ரோகினிக்கு ஏன் ஒரு லட்ச ரூபாய் பணம், யாருக்கு கொடுக்க கேட்கிறார் என்று நோட் பண்ணும் பொழுது சிட்டி இடம் ரோகிணி பணம் கொடுக்கும் பொழுது முத்து பார்த்து விடுவார்.
அப்பொழுது முத்து நம் கார் ஒயரை கட் பண்ணது இந்த சிட்டி தான், அதை கட் பண்ண சொன்னது ரோகிணி தான். அதற்காக தான் பணம் கொடுக்கிறார் என முத்து நினைத்து ரோகினிடம் இதைப் பற்றி கேட்க போகிறார். ஏதாவது ஒரு விஷயத்தில் ரோகினி தப்பித்தாலும் இன்னொரு விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார். இனிமேலும் தப்பிக்க முடியாது என்பதற்கு ஏற்ப இனி ரோகிணி அடுத்தடுத்து விஷயத்தில் முத்துவிடம் சிக்க போகிறார்.