ஓவராக ஆடிய விஜயாவுக்கு ஆப்பு வைக்க போகும் ரோகிணி.. அம்மாவின் பிளானை சொதப்பிய முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவும் ரோகிணியும் அவங்களோட சந்தோசத்துக்காக யாரை எப்படி வேண்டுமானாலும் கஷ்டப்படுத்துவாங்க. ஆனால் இப்பொழுது இவர்களே மாத்தி மாத்தி சூனியம் வைக்கப் போகிறார்கள். அதாவது விஜயாவை பொருத்தவரை பணம் காசு வசதி இருந்தால் மட்டும்தான் மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்.

ரோகினி பொறுத்தவரை தான் எல்லாவற்றிலும் முதலில் இருக்க வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நப்பாசையில் இருக்கக்கூடியவர். அதற்காக பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி நினைச்சதை அடைந்து விடுவார். இப்படிப்பட்ட இவர்கள் இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது மனோஜ் தான். அதாவது ரோகிணி பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொண்ட விஜயா இனியும் என் மகனுக்கு ரோகினி வேண்டாம்.

என் மகனிடம் இருந்து ரோகிணியை பிரித்து விடலாம் என முடிவு பண்ணி மந்திரவாதி மூலம் தாயத்தை வாங்குவதற்கு ஏற்பாடு பண்ணி விட்டார். இதை தெரிந்து கொண்ட ரோகிணி, விஜயா போகும் வழியிலேயே போயி அதே தாயத்தை வாங்கி மனோஜிடமிருந்து விஜயாவை பிரித்து விடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்.

அதன்படி மந்திரவாதியை சந்தித்து விஜயா மற்றும் ரோகிணி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தாயத்தை வாங்கி விட்டார்கள். முதலில் வாங்கிய விஜயா அந்த தாயத்தை பூஜை ரூமில் வைத்து கும்பிட்டு அதன் பிறகு மனோஜ் கையில் கட்டிவிடலாம் என்று வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை ரூமில் வைத்து விட்டார்.

அந்த தாயத்தைப் பார்த்த முத்து, அம்மாதான் அப்பாவிற்காக பூஜை பண்ணி இந்த தாயத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்று தாயத்தை எடுத்து அண்ணாமலை கையில் கட்டி விடுகிறார். இதை பார்த்த விஜயா அய்யோ அம்மா என்று கதறி விட்டார். ஏனென்றால் இது யார் கையில் அந்த தாயத்து இருக்கிறதோ அவர்கள் தான் மனைவியை விட்டு பிரிவார்கள் என்பது தான் விஜயாவின் நம்பிக்கை.

உடனே அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் தாயத்தை கழட்ட சொல்லி விஜயா ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். அதற்கு முத்து மற்றும் மீனா குடும்பத்திற்காக தானே இந்த தாயத்தை பூஜை பண்ணி கொண்டு வந்திருக்கீங்க. அதனால்தான் அப்பா கையில் கட்டினேன் என்று சொல்கிறார். ஆனால் விஜயா உண்மையை சொல்ல முடியாமல் அண்ணாமலை கையில் கட்டியதை அவுக்க முயற்சி எடுக்கிறார்.

அந்த வகையில் விஜயா போட்ட பிளான் முத்து ஒரு வழியாக சொதப்பிவிட்டார். இன்னொரு பக்கம் ரோகினி யாருக்கும் தெரியாமல் அந்த தாயத்தைக் கொண்டு வந்து மனோஜ் கையில் கட்டப் போகிறார். இதனால் ரோகிணி நினைத்தபடி மனோஜ் மற்றும் விஜயாக்கு சண்டை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தால் தான் விஜயா ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருக்கும்.

ஏனென்றால் விஜயாவை பொறுத்தவரை மனோஜ் மட்டும் தான் என்னுடைய பையனாகவும் அவன் தான் முதலில் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அப்படிப்பட்ட விஜயாவுக்கு மனோஜ் மூலம் ரோகிணி சரியான ஆப்பு வைத்ததாக இருக்கும்.