ரோகினி மனோஜ்க்கு பிறந்த விடிவு காலம்.. முத்து மீனா கையில் சிக்கிய ஆதாரம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவுக்கு கொஞ்சம் கெட்ட நேரம் ஆரம்பித்திருக்கிறது, அதனால் கவனமாக இருக்க வேண்டும் என்று கோவிலில் மீனாவிடம் ஒரு பாட்டி கூறியிருந்தார். இதனால் பயந்து போன மீனா கோவிலில் பூஜை பண்ணிய கயிறை வீட்டிற்கு கொண்டு வந்து முத்து கையில் கட்டி விடுகிறார். அப்பொழுது இருவரும் சும்மா விளையாடிய பொழுது மீனா தூக்கி எரிந்த தலவாணி விஜயா முகத்தில் பட்டு விடுகிறது.

இதனால் கடுப்பான விஜயா, மீனாவிடம் சண்டை போடும்போது அண்ணாமலை வந்து தடுத்து விடுகிறார். பிறகு வழக்கம்போல் விஜயா மீனாவை திட்டி விட்டு முதலில் முத்துவிடம் இருந்து மீனாவை பிரிக்க வேண்டும். இவனுக்கும் ஒரு தாயத்தை வாங்க வேண்டும் என்று சொல்லி விஜயா புலம்பிக்கொள்கிறாள். அடுத்ததாக ரோகிணி வித்யாவின் வீட்டிற்கு வருகிறார்.

அங்கே முருகனும் வந்த நிலையில் ரோகிணியும் முருகனும் சந்தித்து பேசி வித்யா நல்ல பொண்ணு கல்யாணம் பண்ண கொடுத்து வச்சிருக்கணும். நல்லபடியா பார்த்துக் கொள்ளுங்கள் என்று முருகனிடம் ரோகிணி சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மாவும் வித்யா வீட்டிற்கு வருகிறார்.

பிறகு முருகன் போனதும் ரோகிணியை பார்த்து ரோகினி அம்மா பேசிக் கொள்கிறார். அப்பொழுது வீட்டில் நடந்த பிரச்சனையை ஒட்டி இன்னும் நீ எந்த உண்மையையும் மறைக்க வேண்டாம். பொறுமையாக எல்லோரையும் கூப்பிட்டு உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்ற விஷயத்தை சொல்லு என அறிவுரை சொல்கிறார்.

இதை கேட்டதும் ரோகினி ஒரேடியாக என் வாழ்க்கையே முடிச்சு விடலாம் என்று நினைக்கிறாயா.? ஏற்கனவே இப்படிதான் எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து இப்போது வரை அதற்காக நான் அவஸ்தைப்பட்டு வருகிறேன். தயவு செய்து இதை நான் பார்த்துக்கொள்கிறேன், நீ தலையிட வேண்டாம் என்று கோபமாக பேசி விடுகிறார். பிறகு ரோகிணியின் அம்மா வெளியே போனதும் வித்யாவும் இதே அட்வைஸ் தான் கொடுக்கிறார்.

அதாவது நீ வீட்டில் இருப்பவர்களிடம் சொல்வதைவிட முத்து மற்றும் மீனாவிடம் சொன்னால் அவர்களே உன்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்வார்கள். இன்னும் சொல்லப்போனால் மனோஜை விட இவங்க உன்னை புரிந்து கொண்டு அதற்கான உதவியும் உனக்கு செய்வார்கள் என்று ரோகினிடம் வித்தியா சொல்கிறார். இதை கேட்டு ரோகிணி கோபப்பட்டு கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக முருகன் மற்றும் வித்யா ஒரு வீட்டை வாங்கப் போகிறார்கள். அதற்கு அட்வான்ஸ் பணத்தை கொடுப்பதற்கு முன் மீனா மற்றும் முத்துவுக்கு போன் பண்ணி அவர்களையும் அதை வீட்டிற்கு கூப்பிடுகிறார்கள். உடனே முத்து மற்றும் மீனா, முருகன் வித்யா இருக்கும் வீட்டிற்கு போய்விடுகிறார்கள். அப்படி இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஓனர் வந்து விடுகிறார்.

உடனே முருகன், ஓனரிடம் பணம் கொடுக்கும் பொழுது முத்துவை கூட்டிட்டு ஓனரை அறிமுகப்படுத்துகிறார். அப்பொழுது முத்து மற்றும் மீனாவிற்கு தெரிந்து விட்டது, இது மனோஜை ஏமாத்திட்டு போன கதிர் என்று. உடனே கதிர் சட்டையை பிடித்துக் கொண்டு முத்து அந்த திருட்டு கும்பலை லாக் செய்து விடுகிறார்.

இதன் மூலம் தொலைந்து போன பணம் திரும்ப கிடைப்பது போல் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகிறது. முத்து கையில் இருக்கும் ஆதாரத்தை வைத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நெஞ்ச பணத்தை திரும்ப பெற்று மனோஜ் மற்றும் ரோகினிடம் ஒப்படைத்து விடுவார்கள். கடைசி வரை இவர்களால் மற்றவர்களுக்கு தான் நல்லது நடக்குதே தவிர இவர்களுக்கு ஒரு நல்லதும் நடக்க மாட்டேங்குது. இந்த சந்தோஷத்துடன் கூடிய சீக்கிரத்தில் ரோகினியும் அம்மாவாக போகிறார்.