ஓவராக ஆடிய ரோகிணி, கமுக்கமாக ஸ்கோர் பண்ணும் நிலா.. விஜய் டிவி சீரியலின் பரிதாபம்

Vijay Tv Serial: சன் டிவி சீரியலுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதுவும் டாப் 5 இடத்திற்குள் சிறகடிக்கும் ஆசை சீரியல் வந்துவிடும். இந்த ஒத்த சீரியலால் தான் விஜய் டிவி, சன் டிவியுடன் போட்டி போட்டு வருகிறது. ஆனால் இதையே ஆட்டிப்படைக்கும் விதமாக ரோகினி ஆட்டம் ஓவராக இருக்கிறது.

பொய்ப் பித்தலாட்டங்களை பண்ணி ஏமாற்றி வரும் ரோகிணி பற்றிய சில விஷயங்கள் தெரிந்தாலும் அதற்கு பெரிய ரியாக்ஷன் எதுவும் இல்லாமல் மறுபடியும் அந்த வீட்டில் திமிராக தான் ரோகினி சுற்றி வருகிறார். முக்கியமாக விஜயாவை ஐஸ் வைக்கும் விதமாக ரோகினி விரிக்கும் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்து கடுப்பாகுதால் சிறகடிக்கும் ஆசை சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வருகிறது. இந்த சமயத்தில் இதை ஓவர் டேக் பண்ணும் விதமாக கமுக்கமாக வந்து நிலா ஸ்கோர் பண்ணுகிறார். அதாவது சமீபத்தில் புதுசாக வந்த அய்யனார் துணை சீரியல் தற்போது மக்களின் ஃபேவரிட் சீரியலாக மாறிக்கொண்டு வருகிறது.

அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அய்யனார் துணை அடுத்தடுத்து விஜய் டிவியின் முதல் இடத்திற்கு வந்து சன் டிவிக்கு டஃப் கொடுக்கப் போகிறது. இதை தவிர மற்ற சீரியல்கள் எதுவும் சொல்ற மாதிரி இல்லாமல் தான் விஜய் டிவி சீரியல் பரிதாபமாக இருக்கிறது.