என் கதை முடியும் நேரம் வந்துவிட்டது.. அவசரமாக மொத்த பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கும் தனம்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்க்கும்போது என்னடா இது எங்கேயும் இல்லாத கொடுமை எல்லாம் இந்த சீரியலில் நடக்குது என்று சொல்லும் அளவிற்கு வரிசையாக அக்கப்போர் பண்ணிக் கொண்டு வருகிறார் தனம். உடம்பு சரியில்லை என்றாலும், ஏதாவது நோய் வந்துவிட்டது என்றாலும் முதலில் ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் எடுக்கணும்.

அதை விட்டுப் போட்டு கடமை கண்ணியம் என்று குடும்பத்தின் பாரத்தை தலையில் சுமந்து கொண்டு ஓவர் ஆக்டிங் பண்ணக்கூடாது. அதாவது தனத்தின் நேரம் முடிய போகிறது என்பதால் பொறுப்புடன் நடந்து கொள்கிறாராம். இதிலிருந்து இவர்கள் சொல்ல வரும் கருத்து என்ன. யாராவது ஒருவருக்கு நோய் வந்திருக்கிறது என்பது தெரிந்து விட்டால் உடனே ரொம்ப ஆவேசமாக சுறுசுறுப்பாக இருப்பார்களோ?

இது என்னடா எங்கேயும் இல்லாத அநியாயமாக இருக்கிறது. இதுவரை இந்த நாடகத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. அட்லீஸ்ட் முடிக்கும்போது ஒரு நல்ல விஷயத்தை சொல்லி முடிக்கலாமா. அதிலும் உங்க சுய லாபத்துக்காக எங்களை ஏன் பலிகாடாக ஆக்குறிங்க.

அதாவது தனம் ஆசப்பட்ட மாதிரி ஐஸ்வர்யாவின் வளைகாப்பு முடிந்து விட்டது. அதன் பிறகு இவருக்கு வந்த கேன்சர் பற்றி சொல்வார் என்று எதிர்பார்த்தால், எல்லோரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்கிறார்கள். அதனால் இந்த விஷயத்தை சொல்லி அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று மூடி மறைக்கிறார். இதற்கு அந்த மீனாவும் உடந்தையாக இருக்கிறார்.

தற்போது இவருடைய அடுத்த ஆசையை நிறைவேற்றும் விதமாக வீட்டின் கிரகப்பிரவேசத்தை கூடிய சீக்கிரத்தில் நடத்த வேண்டும் என்று தனம் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறார். இதற்கு அடுத்து கூடிய விரைவில் கிரகப்பிரவேசம்.

தன் உயிர் போகும் முன் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு செல்ல வேண்டும். இவருடைய கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் குடும்பத்தில் உள்ள அனைவரும் இவர் என்ன சொன்னாலும் அதை செய்வதற்கு முட்டாளாக இருக்கிறார்கள். இதை எவ்வளவு தூரத்துக்கு இன்னும் கொண்டு போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.