நினைத்ததை சாதித்து காட்டிய சக்திவேல், அவமானத்தில் பாண்டியன் குடும்பம்.. சொதப்பிய அரசி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சக்திவேல் பொறுத்தவரை பாண்டியன் குடும்பத்தை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்று நினைப்புஇருக்கிறது. அதற்கு காரணம் ஆசையாக வளர்த்த தங்கச்சியும் வீட்டை விட்டு போய் பாண்டியனை கல்யாணம் பண்ணி அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.

இதே மாதிரி அண்ணனின் மகள் ராஜியும் குடும்பத்தை தலை குனிய வைத்து விட்டு கதிர் பொண்டாட்டியாக வந்துவிட்டார் என்ற கோபத்தில் சக்திவேல், பாண்டியனை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் பாண்டியனின் மகள் அரசியை எப்படியாவது நீ கல்யாணம் பண்ணி காட்ட வேண்டும் என்று குமரவேலுவிடம் சொன்னார்.

குமரவேலுவும் அப்பா சொன்னபடி அரசியை காதலித்தது போல் நடித்து நம்ப வைத்து விட்டார். ஆனால் இந்த விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்ததால் அவசர அவசரமாக சதீஷ் உடன் அரசிக்கு கல்யாணம் பண்ணுவதற்கு ஏற்பாடுகள் பண்ணினார். இதை கெடுக்கும் விதமாக குமரவேலு அரசியை கூட்டிட்டு போயி ஒரு நாள் முழுவதும் வைத்து திருப்பி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

ஆனால் அரசியை காணவில்லை என்று ஒட்டுமொத்த குடும்பமும் நின்ற பொழுது குமரவேலு அரசியுடன் வந்து நின்றார். இதனை பார்த்த சதீஷின் அம்மா அப்பா பாண்டியனை திட்டி விட்டு சாபம் கொடுத்து அந்த இடத்திலிருந்து சதீஷை கூட்டி போய் விடுகிறார். ஆனால் அரசி தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்டு தான் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார்.

குமரவேலு தான் அரசி கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார் என்று அனைவரும் நினைத்து அரசியை ஒதுக்கி விட்டார்கள். சக்திவேல் நினைத்தபடி அரசி அந்த வீட்டில் வாழப்போகிறார். ஆனால் அரசியை வைத்து பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த சக்திவேல் மற்றும் குமரவேலுக்கு அரசி கொடுக்க போகும் ஒவ்வொரு அடியும் மரண அடியாக இருக்கப் போகிறது.

ஆனால் அரசிக்கு உண்மையிலேயே குமரவேலு தாலி கட்டவில்லை என்று சதீஷ்க்கு தெரிய வரும் பொழுது நிச்சயம் அரசி சதீஷ் கல்யாணம் நடக்கும்.