97 நாட்களில் ஏடிகே வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கிட்டதட்ட 100 நாட்களை நெருங்க உள்ளது. ஆகையால் அடுத்த வாரம் யார் டைட்டில் வின்னர் பட்டத்தை அடிக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு தெரியவரும். இப்போது அமுதவாணன், அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாடகர் ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆரம்பத்தில் புறம் பேசுபவராக ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஏடிகே அதன் பின்பு உண்மையான கருத்துக்களை தான் எடுத்து வைக்கிறார் என்பதை உணர்ந்தனர். மேலும் ஊர் கிழவி என்ற பட்டமும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

இந்த வாரம் ஏடிகே தான் பிக் பாஸ் வீட்டை விட்டு போகிறார் என்று தெரிந்த ரசிகர்கள் மைனா நந்தினி, கதிரவன் இவர்களுள் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு போய் இருக்கலாம் என தங்களது கருத்தை கூறி வருகிறார்கள். இப்போது பிக் பாஸ் வீட்டில் ஏடிகே வாங்கிய மொத்த சம்பள விபரம் வெளியாகி உள்ளது.

அதாவது பிக் பாஸில் குறைந்த சம்பளம் வாங்கிய நபர் ஏடிகே தான். வாரத்திற்கு 16,000 முதல் 18,000 வரை சம்பளமாக பெற்று வருகிறார். அந்த வகையில் கிட்டதட்ட 97 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் ஏடிகே பயணித்துள்ளார். அதை கணக்கிட்டு பார்த்தால் கிட்டதட்ட 18 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளார்.

இதனால் பிக் பாஸ் ஏடிகேக்கு சம்பளத்தை வாரி வழங்கி உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் ஏடிகேக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். ஆரம்பத்தில் அறிமுகமே இல்லாமல் நுழைந்த இவருக்கு இப்போது பெருமளவில் ஆதரவு உள்ளதால் சினிமா வாய்ப்பு தொடர்ந்து ஏடிகேக்கு வரவுள்ளது.

பாடகராக மட்டுமல்லாமல் மற்றவரை போல் மிமிக்கிரி செய்வது என ஏடிகே உள் நிறைய திறமைகள் உள்ளடங்கி உள்ளது. ஆகையால் இவர் சினிமாவில் ஒரு நடிகராக வரவும் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். மேலும் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் சில தினங்களில் ரசிகர்களுக்கு தெரிய வர உள்ளது.