விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனவுடன் இருந்த சந்தியா, தற்போது புகுந்த வீட்டாரின் துணையுடன் பரீட்சையில் தேர்வாகி ட்ரெயினிங் இருக்கிறார். அங்கு அவரை விட வந்த சரவணன் வழக்கத்தைவிட ரொமான்ஸ் தூக்கலாக பேசுகிறார்.
உடனே மனைவி சந்தியாவும் போலீஸ் டிரஸ் அணிந்தபடி அவருடன் கொஞ்சிக் குலவுகிறார். ஏனென்றால் ஐபிஎஸ் ட்ரெய்னிங்கில் இருக்கும் சந்தியா சில மாதங்களுக்கு சரவணனை பார்க்க முடியாது என்பதால் வருத்தம் அடைகிறார்.
ஆனால் சரவணன் அவர்கள் இருக்கும் போட்டோவை சந்தியாவின் அறையில் வைத்து, ’24 மணிநேரமும் அவரையே கண்காணிப்பேன் அவரிடமிருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்று வருத்தத்தில் இருக்கும் சந்தியாவை தேற்றுகிறார்.
மேலும் தற்போது நடக்கப்போகும் போலீஸ் ட்ரெய்னிங்கில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டு, அவர்கள் இருக்கும் ஊரிலேயே போஸ்டிங் போடப்படும் என்ற விசயத்தை மாமியார் சிவகாமி தெரிந்து கொள்கிறார்.
இதன் பிறகு அந்தக் கோப்பையை சந்தியா தான் பெற வேண்டும் என்று அவரிடம் சத்தியம் வாங்குகிறார். இதற்காக சந்தியாவும் இனிமேல் ட்ரெய்னிங்கில் முழு கவனம் செலுத்தி முதலிடம் வருவதற்காகதன்னுடைய முழு முயற்சியை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
ஆனால் சின்னத்திரை ரசிகர்களுக்கு ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாப்பாத்திரத்தில் முன்பு நடித்திருந்த ஆலியா மானசா மட்டும் தற்போது இருந்திருந்தால் நிச்சயம் தூள் கிளப்பி இருப்பார் என்றும் சோசியல் மீடியாவில் இந்த சீரியலை குறித்து கமெண்ட் செய்கின்றனர்.