மகாநதி சீரியலில் காவேரிக்கு சாரதா கொடுக்கும் நெருக்கடி.. விஜயை கல்யாணத்துக்கு கூப்பிட்ட வெண்ணிலாவின் மாமா

Mahanadhi Serial: விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், சாரதா பொருத்தவரை காவிரி விஜயுடன் சேர்ந்து வாழ கூடாது. விஜய் வேண்டாம் என்று தலை முழுங்க வேண்டும் என்ற நினைப்பில் காவிரிக்கு ஓவராக நெருக்கடி கொடுக்கிறார். அந்த வகையில் விஜய் கட்டின தாலி உண்மையான தாலி இல்லை என்று சாரதா நினைப்பதால் அந்த தாலி தேவையில்லை கழட்டி தூக்கி வீசு என்று காவிரிக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

போதாதருக்கு குமரன் அம்மாவும். சாரதாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக காவிரியிடம் கடுமையாக பேசுகிறார். ஆனால் காவேரி பொருத்தவரை மனசுக்குள் விஜய் மட்டும்தான் இருக்கிறார் என்பதால் எதற்கும் பதில் சொல்ல முடியாமல் பொருட்காட்சிக்கு கிளம்புகிறார். ஆனால் சாரதா விடாப்பிடியாக இருந்து இப்பொழுதே பதில் சொல்ல வேண்டும் என்று காவிரியை கஷ்டப்படுத்துகிறார்.

காவிரி நான் வந்து பேசுகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அப்படிப் போகும்பொழுது வெண்ணிலா நடுரோட்டில் நின்று காவிரியை வழிமறித்து பேசுகிறார். என்னுடைய விஜய் நீ மயக்கி கல்யாணம் பண்ணிக் கொண்டாய். ஆனாலும் உனக்கு தேவையான காசு பணம் கிடைத்துவிட்டது. பிறகு உனக்கு எதுக்கு என்னுடைய விஜய் கிட்ட தாலி. அதை தூக்கிக் கொடுத்துவிட்டு விவாகரத்து பண்ணிட்டு போ என சொல்கிறார்.

இதை கேட்டதும் கோபப்பட்ட காவிரி நீ எது பேச வேண்டுமானாலும் விஜய் இடம் பேசிக்கோ என்னிடம் வந்து இப்படி கெஞ்சாத என சொல்லுகிறார். அந்த வகையில் வெண்ணிலா மற்றும் காவிரி இருவரும் மோதிக் கொள்கிறார்கள். இருந்தாலும் விஜய் மீது இருக்கும் நம்பிக்கையால் காவேரி தைரியமாக வெண்ணிலாவுக்கு பதிலடித்து கொடுத்து விடுகிறார்.

அடுத்ததாக தாத்தா பாட்டியை சந்திக்க வரும் விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டு ஆசீர்வாதம் வாங்கி கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்கிறேன் என்று விஜய் சொல்கிறார். அந்த சமயத்தில் வெண்ணிலவின் மாமா வீட்டுக்குள் நுழைகிறார். இவரைப் பார்த்ததும் விஜய் கோபப்பட்டு பேசுகிறார். ஆனால் தாத்தா பொறுமையாக இரு என்று சொல்லி வெண்ணிலாவின் மாமாவிடம் என்ன விஷயமாக வந்தீங்க என கேட்கிறார்.

அதற்கு வெண்ணிலாவின் மாமா நான் விஜய் இடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல தான் வந்தேன் என சொல்கிறார். அப்பொழுது விஜய் என்ன என்று கேட்ட பொழுது உங்களுக்கும் வெண்ணிலாவுக்கும் நாளைக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கிறேன். நீங்கள் நிச்சயம் கோவிலுக்கு வர வேண்டும் என்று சொல்கிறார். ஆனாலும் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக விஜய் கோவிலுக்கு போகிறார்.

அங்கே போன இடத்தில் பசுபதி மற்றும் அஜய் அப்பா அனைவரும் இருப்பதை பார்த்து விஜய் கடுப்பாகி சண்டை போட ஆரம்பித்து விடுகிறார். பிறகு போலீஸ் வந்து பிரச்சனையான நிலையில் அஜய்யின் அப்பா, விஜய் பழிவாங்க வேண்டும் என்பதற்காக வெண்ணிலாவின் குடும்பத்தை இவன்தான் கொலை செய்ய சொன்னான் என்று பொய் சொல்லி விடுகிறார். இதனால் விஜய் சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் காவிரி இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்து விடுவார்.