மகாநதி சீரியலில் காவிரியை விவாகரத்து செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் சாரதா.. பொண்டாட்டியை தேடி போன விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவை வைத்து காவேரி மற்றும் விஜய்க்கு இடையில் பிரச்சனை ஏற்படுத்தி இரண்டு பேரையும் பிரிக்க வேண்டும் என பசுபதி மற்றும் ராகினி தான் பிளான் பண்ணுகிறார்கள் என விஜய் தெரிந்து கொண்டார். அதனால் விஜய் பசுபதியை வெளுத்து வாங்கி கண்டித்து வந்திருக்கிறார்.

இதனால் கோபத்தில் இருக்கும் பசுபதி, பத்திரிகையாளர்களை வரச் சொல்லி விஜய் காவேரிக்கு நடந்தது ஒப்பந்த கல்யாணம் தான். பணத்துக்காக தான் காவேரி, விஜய்யை கல்யாணம் பண்ணினார். தற்போது பணமும் கிடைத்துவிட்டது ஒப்பந்தமும் முடிந்து விட்டதால் காவேரி, விஜய் விட்டு ஒதுங்கி விட்டார். ஆனால் விஜய் தான் காவிரி பின்னாடி சுற்றிக் கொண்டு வருகிறார் என்று விஜய் மற்றும் காவிரியை பற்றி தவறாக பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டார்.

உடனே பத்திரிகையாளர்களும் காவிரி வீட்டுக்கு சென்று இதையெல்லாம் கேட்டு அவர்களை தொந்தரவு படுத்தி விட்டார்கள். போதாதருக்கு அவர்கள் தங்கி இருக்கும் ஓனரும் நடந்த பிரச்சினையால் காவேரி வீட்டில் வந்து சண்டை போடுகிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த சாரதா, காவேரி கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட சொல்லி விஜய் விவாகரத்து பண்ண சொல்லி பிரச்சனை பண்ணுகிறார்.

ஆனால் காவிரி இந்த பிரச்சினையை பேசிப் பேசி பெரிசாக வேண்டாம், நான் பண்ணியது தவறுதான் என்று நிறைய தடவை மன்னிப்பு கேட்டு விட்டேன். அதனால் இப்பொழுது அதை பற்றி பேச வேண்டாம் நான் பொருட்காட்சி விஷயமாக ஆபிஸரை பார்த்து பேசிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு விஜயின் நண்பர் விஜய்க்கு போன் பண்ணி பத்திரிக்கையாளர்கள் காவிரியை பற்றி தவறாக எழுதின விஷயத்தை சொல்கிறார்.

உடனே காவிரியை சந்தித்து பேசி ஆறுதல் படுத்த வேண்டும் என்று விஜய் சாரதா வீட்டுக்கு வருகிறார். அங்கே காவேரி இல்லாததால் சாரதா, விஜய்யை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி விடுகிறார். அதன் பிறகு காவேரியை தேடி விஜய் அலையும் பொழுது காவிரி திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். உடனே விஜய் காவிரியை தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து காவிரி கர்ப்பம் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்கிறார்.

இதனால் சந்தோசமாகும் விஜய், இனி காவிரிக்கு எந்த ஒரு கஷ்டமும் வராதபடி பொக்கிஷமாக பார்த்துக் கொள்வார். அத்துடன் காவிரியின் கர்ப்பம் விஷயம் சாரதா குடும்பத்திற்கும் தெரிந்து விட்டால் விஜய்யிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று அவர்களும் நினைக்க மாட்டார்கள். அந்த வகையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து வெண்ணிலாவை சரிகட்டி வெளியே அனுப்ப முயற்சி எடுப்பார்கள்.