சரவணனுக்கு தெரிந்த உண்மை, எஸ்கேப் ஆகும் தங்கமயில்.. கதிருக்கு பைக்கை கொடுத்த ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் ஆசைப்பட்ட பைக்கை நடனத்தின் மூலம் ஆடி வின் பண்ணி ராஜி அந்த பரிசை பெற்றுக் கொண்டார். அந்த வகையில் பாண்டியன் வீட்டிற்கு அந்த பைக்கை கொண்டு வருகிறார்கள். இது தெரிந்ததும் ராஜி ஓவராக மேக்கப் பண்ணி கதிருடன் பைக்கில் ரைடு போகலாம் என்று ஆசையுடன் கிளம்பிவிட்டார்.

அப்பொழுது ராஜிக்கு போன் பண்ணி பைக் வந்து கொண்டிருக்கிறது என்று சொல்லிய நிலையில் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பைக் வந்ததும் ராஜியிடம் சாவி கொடுக்கிறார்கள். ஆனால் ராஜி, கதிரை சாவியை வாங்க சொல்கிறார். கதிர் நீதான் கஷ்டப்பட்டு இருக்கிறாய், அதனால் நீ தான் வாங்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால் ராஜி பிடிவாதமாக கதிரை கூப்பிட்ட நிலையில் பாண்டியன் இரண்டு பேரும் சேர்ந்து வாங்குங்க என்று சொல்லி விடுகிறார். உடனே ராஜி மற்றும் கதிர் சேர்ந்து பைக் சாவியை வாங்குகிறார்கள். உடனே கதிரிடம் ராஜி ஓட்டி பாரு என்று சொல்கிறார். அப்பொழுது கதிர் பைக்கில் ஏறியதும் முதலில் நம்மளை தான் பின்னாடி வைத்து கூட்டிட்டு போவார் என்று ராஜி எதிர்பார்த்தார்.

ஆனால் கதிர், பழனிச்சாமியை கூட்டிட்டு போனார். அதன் பிறகு கோமதி, சரவணன் எல்லோரையும் ஒரு ரவுண்டு கூட்டிட்டு போய் வந்து விடுகிறார். இதன் பிறகு நம்மை கூப்பிடுவார் என்று ராஜி எதிர்பார்த்த நிலையில் கதிர், பாண்டியனை கூட்டிட்டு போய் ராஜியை வெறுப்பேற்றி விட்டார். இதனால் கடுப்பான ராஜி, இனி நீயே என்னை கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன் என்று கோபமாகி போய்விட்டார்.

பிறகு பாண்டியனை கடையில் விட்ட கதிர், செந்திலையும் கூப்பிட்டு இருவரும் சேர்ந்து ரைடு போகிறார்கள். அடுத்ததாக தங்கமயில் சுகன்யா கோமதி மற்றும் அரசி அனைவரும் சேர்ந்து கல்யாண வேலையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அங்கே வந்த சரவணன் கோமதி இடம் நான் தங்கமயிலை கூட்டிட்டு எனக்கு தெரிந்தவர்களிடம் பத்திரிக்கை கொடுத்துட்டு வருகிறேன் என்று சொல்கிறார்.

இதைக் கேட்டதும் தங்கமயில் சந்தோஷத்துடன் கிளம்பி சரவணன் கூட போகிறார். அப்படி சரவணன் கூட்டிட்டு போன இடம் என்னவென்றால் தங்கமயில் சொன்ன காலேஜுக்கு. இதை எதிர்பார்க்காத தங்கமயில் பயந்துவிட்டார். ஆனாலும் சரவணன் இந்த சர்டிபிகேட் பிரச்சினையை இப்பொழுதே முடிக்க வேண்டும் என்று காலேஜுக்குள் கூட்டிட்டு போகிறார்.

ஆனால் தங்கமயில் என்னால் வர முடியாது என்று சொல்லி நான் காலேஜே படிக்கவில்லை என்ற உண்மையை சரவணிடம் சொல்லிவிடுகிறார். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத சரவணன் அப்செட் ஆகி விட்டு நீ எப்பொழுது ஹோட்டலில் வேலை பார்த்தியோ அப்பொழுது நமக்குள் விரிசல் ஆரம்பித்துவிட்டது. தற்போது உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.

ஆனாலும் வீட்டில் கல்யாண விஷயத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்த சரவணன், தங்கமயில் பற்றிய உண்மையை இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று உண்மையை மறைத்து விடுவார். இதனால் இப்போதைக்கு தங்கமயில் எஸ்கேப் ஆகிவிடுவார்.

ஆனாலும் இன்னும் ஒரிஜினல் நகை இல்லை, போலி நகை தான் போட்டு இருக்கிறார். கஷ்டப்படுகிற குடும்பம், தங்கமயிலுக்கு வயசு கூடி இருக்கிறது என்ற உண்மை எல்லாம் தெரிந்து விட்டால் பாவம் தங்கமயிலின் நிலைமை என்னவாக இருக்கப் போகிறதோ? சரவணன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் அடுத்தடுத்து வரப்போகும் சிக்கல்களாக இருக்கப் போகிறது.