8 வருடங்களுக்குப் பின் குட் நியூஸ் சொன்ன சரவணன் மீனாட்சி ஜோடி.. வைரலாகும் புகைப்படம்

பொதுவாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒன்று நிறைவுற்றால் அடுத்தடுத்த சீசன்கள் வருவது சாதாரணம்தான். ஆனால் ஒரு சீரியல் அடுத்தடுத்த சீசன்கள் வந்தது என்ற வரலாறு உண்டு என்றால் அது சரவணன் மீனாட்சி தொடருக்குத்தான். அவ்வாறு ரசிகர்கள் இத்தொடருக்கு பேர் ஆதரவு கொடுத்திருந்தனர்.

விஜய் டிவியில் மெர்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடியாக நடித்து ஒளிபரப்பான தொடர் சரவணன் மீனாட்சி. இந்தத் தொடரில் கலக்கி வந்த இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்த சில வெப் சீரிஸில் இவர்கள் ஒன்றாக நடித்தனர். மேலும் செந்திலுக்கு சினிமாவில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் சின்னத்திரையைப் போல வெள்ளிதிரையில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் விஜய் டிவியிலேயே மீண்டும் சில தொடர்களில் நடித்து வந்தார்.

கடைசியாக விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மாயன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். மேலும் செந்தில், ஸ்ரீஜா இருவரும் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்கள். அதில் தங்களைப் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் செந்தில் ஸ்ரீஜாவுக்கு கிட்டத்தட்ட திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் செந்தில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது விரைவில் நாங்கள் பெற்றோர் ஆகப் போகிறோம் என்று வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த செந்தில், ஸ்ரீஜா ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து செந்திலுக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்பு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதிய சீரியலில் செந்தில் களம் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

senthil-sreeja
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →