தங்கமயில் செய்யும் எடுபிடி வேலையை பார்த்த சரவணன்.. அரசியை தொடர்ந்து பாண்டியன் குடும்பத்திற்கு வரும் அதிர்ச்சி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நல்லா இருந்த பாண்டியன் குடும்பத்தில் குட்டையை குழப்பம் விதமாக பழனிவேலுவை கல்யாணம் பண்ணிட்டு வந்த சுகன்யா, சகுனி வேலையை பார்த்து அரசி குமரவேலுவை காதலிக்கும்படி செய்து விட்டார். இதனால் வீட்டிற்கு தெரியாமல் திருட்டுத்தனமாக குமரவேலுடன் தியேட்டருக்கு போன அரசியை சரவணன் பார்த்து கையும் களவுமாக பிடித்து வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டார்.

இதனால் பெரிய பூகம்பம் வெடித்த நிலையில் பாண்டியன் எடுத்த அதிரடி முடிவால் அரசிக்கும் சதீஷுக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்துவிட்டது. இதனை தொடர்ந்து சுகன்யா எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி குமரவேலுடன் அரசியை சேர்த்து வைத்து பாண்டியன் குடும்பத்தை நிம்மதி இல்லாமல் ஆக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் ஹோட்டலில் எடுபிடி வேலையை பார்த்து வரும் தங்கமயில் பற்றிய உண்மையையும் சரவணனுக்கு தெரிய வந்துவிட்டது. அதாவது சரவணன் நண்பருடன் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்கு தங்கமயில் வேலை பார்க்கும் அதே ஹோட்டலுக்கு தான் போகிறார். அப்படி போகும்பொழுது அந்த டேபிளுக்கு தேவையான சாப்பாடு அனைத்தையும் தங்கமயில் தான் எடுத்துட்டு வந்து கொடுக்கிறார்.

அப்பொழுது தங்கமயிலை பார்த்த சரவணன் அதிர்ச்சியாகிய நிலையில் கோபத்துடன் வெளியே போய் விடுகிறார். தங்கமயில் பின்னாடியே சென்று உண்மையை எடுத்துச் சொல்ல வரும்பொழுது சரவணன் எதுவும் காது கொடுத்து கேட்காமல் என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டாய் என்று திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். சரவணன் பொறுத்தவரை எந்த உண்மையையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் மறைக்க மாட்டார்.

அந்த வகையில் தங்கமயில் வேலை பார்க்கும் விஷயத்தையும் பாண்டியனிடம் போய் சொல்லி குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தி விடுவார். இதனால் தங்கமயில் ஏன் ஹோட்டலில் வேலை பார்த்தார், எதற்கு பொய் சொன்னார் என்று கேள்வி வரும் பொழுது தங்கமயில் படிக்கவில்லை என்ற உண்மை பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வந்துவிடும். இதனால் மறுபடியும் பாண்டியன் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க போகிறது.

அத்துடன் இந்த விஷயத்தை வைத்து சுகன்யா ஏதாவது ஏழரை இழுக்க பார்ப்பார். எப்படி அரிசி மற்றும் தங்கமயில் இருவரும் சரவணன் இடம் சிக்கினார்களோ, அதே மாதிரி சுகன்யா போடும் இரட்டை வேஷமும் சரவணனுக்கு தெரிய வந்தால் இன்னும் இந்த நாடகம் சுவாரஸ்யமாக இருக்கும்.