அன்னம் சீரியலில் சரவணன் கொடுத்த அதிர்ச்சி, அன்னம் கல்யாணத்தில் குளர்ப்படி.. ரம்யா எடுக்கப் போகும் விபரீத முடிவு

Annam Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அன்னம் சீரியல் மக்களின் பேவரைட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் 7 மணிக்கு ஒளிபரப்பாகி இருந்தாலும் தற்போது 10 மணிக்கு மாற்றிய பொழுது விறுவிறுப்பான கதைகளுடன் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்த அன்னம் கல்யாணம் நடைபெறப் போகிறது.

ஆனால் இங்கே சரவணன் கொடுத்த அதிர்ச்சியால் அன்னம் கல்யாணத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் வரப்போகிறது. அதாவது சரவணனுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்றாலும் அம்மா கொடுத்த ஐடியாவின் படி அன்னத்தை நம்ப வைத்து கல்யாணம் மேடை வரும் வரை காய் நகர்த்தி வந்தார்.

அத்துடன் சொத்து பணம் எல்லாம் கைக்கு வந்ததும் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுவிட்டு கல்யாணம் மண்டபத்தை விட்டு சரவணன் ஓடிப் போய் விடுகிறார். இது எதுவும் தெரியாத அன்னம், மாமா ஆசைப்பட்ட மாதிரி தன்னுடைய வாழ்க்கைத் துணையுடன் சேரப் போகிறோம் என்ற கனவுடன் மணமேடையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அப்படி காத்துக் கொண்டிருக்கும் அன்னத்துக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக சரவணன் ஓடிப் போன விஷயம் தெரிய வருகிறது. ஏற்கனவே அன்னத்தின் அப்பா மற்றும் சித்தி ஓவராக பேசிய நிலையில் இதுதான் சான்ஸ் என்று வேலுவை கட்டி வைக்க போகிறார்கள்.

ஆனால் இது சரியான முடிவு இல்லை என்பதால் அன்னத்தின் தாய்மாமன் சரவணன் செய்த தவறுக்காக கார்த்திகை அன்னத்தின் கழுத்தில் தாலி கட்ட சொல்லப் போகிறார். கார்த்திக்கு வேற வழி எதுவும் இல்லாததால் அன்னத்தின் வாழ்க்கையை காப்பாற்றவும் அப்பா சொன்ன வாக்கை நிறைவேற்றவும் அன்னத்தின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார்.

இதனால் ஏமாற்றத்தில் இருக்கும் ரம்யா, அன்னம் மற்றும் கார்த்திகை பழி வாங்குவதற்காக சரவணனை கல்யாணம் பண்ணிக்கொண்டு அந்த வீட்டின் மருமகளாக வந்து விரோதியாக மாறப் போகிறார்.