Savitri was a pet like MGR: தென்னிந்திய நடிகையாக 50களில் வலம் வந்தவர்தான் நடிகையர் திலகம் சாவித்திரி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குகே டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியை வளர்த்து வந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல அவர் செல்லமாக வளர்த்த சிறுத்தை புலியுடன் வீரநடை போடும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதிகாலையில் செல்லமாக தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களை வாக்கிங் கூட்டிக்கொண்டு போவது போல், அந்த புகைப்படத்தில் சாவித்திரியம்மா தன்னுடைய வீட்டில் செல்லமாக வளர்த்த புலியுடன் வாக்கிங் செல்கிறார்.
இதை ஏற்கனவே அவருடைய மகள் சாமுண்டீஸ்வரி அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர்களுடைய பண்ணை வீட்டில் சில காலம் வளர்த்து வந்த சிறுத்தை புலி நடிகை சாவித்திரியுடன் நெருக்கமாக இருக்குமாம். அவர் பண்ணை வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த சிறுத்தை புலியை வாக்கிங் கூட்டிக் கொண்டு செல்வாராம்.
அப்போது எடுத்த புகைப்படம் தான் இது! என்று சாமுண்டீஸ்வரி கூறினார். இந்த விஷயம் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் எம்ஜிஆர் ‘ராஜா’ என்கின்ற ஒரு சிங்கத்தை வளர்த்தது ஊரறிந்தது. அந்த சிங்கம் எம்ஜிஆரின் வீட்டில் அவருடைய அரவணைப்பில் வளர்ந்து வந்தது.
சிங்கத்துக்கு நிகரான செல்லப்பிராணியை வீட்டில் வளர்த்த சாவித்திரி
அடிமைப் பெண் படத்தில் எம்ஜிஆரின் செல்லப்பிராணியான ராஜா அவருடன் இணைந்து நடித்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சென்னை உயிரியல் பூங்காவில் விடப்பட்டது. அதற்கான முழு செலவையும் எம்ஜிஆர் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார். ஆனால் ராஜா எம்ஜிஆரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏக்கத்திலேயே இறந்துவிட்டது.
பின்பு பாடம் செய்யப்பட்ட அதன் உருவம் இப்போது எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ளது. எம்ஜிஆர் வளர்த்த செல்லப்பிராணி சிங்கத்திற்கு நிகராக நடிகை சாவித்திரியும் சிறுத்தை புலியை வளர்த்த பெருமையை பெற்றார். பல வருடத்திற்கு முன்பு நடிகை சாவித்திரி தன்னுடைய பண்ணை வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணி சிறுத்தை புலியுடன் எடுத்த புகைப்படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
சாவித்திரி செல்லமாக வளர்த்த சிறுத்தை புலி
