Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், சீனு கடனாக பணத்தை வாங்கும் பொழுது பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று ஒரு கண்டிஷன் இருந்தது. அதற்காக பத்மாவையும் சிவராமனையும் கூட்டிட்டு வந்து சாட்சி கையெழுத்து போட்டு சீனு நினைத்தபடி பணத்தை வாங்கி விட்டார்.
ஆனால் இதில் புவனேஸ்வரி செய்த தில்லாலங்கடி வேலை கடனுக்கு கொடுத்த பத்திரத்துடன் ரகுராம் வீட்டை புவனேஸ்வரிக்கு கொடுத்தது போல் ஒரு பத்திரத்தையும் ரெடி பண்ணி வைத்து விட்டார். இதை தெளிவாக பார்க்காத சீனு கையெழுத்து போட்டு விட்டார். அத்துடன் சிவராமன் மற்றும் பத்மாவும் கையெழுத்து போட்டு விட்டார்கள்.
அடுத்து புவனேஸ்வரி நினைத்தபடி அந்த பத்திரம் கையில் கிடைத்ததும் பஞ்சாயத்து மூலம் அந்த வீட்டுக்கு எங்களுக்கு தான் உரிமை இருக்கிறது என்று சொல்லிவிட்டார். ரகுராமும் வேற வழி இல்லாமல் அந்த வீட்டை ஒப்படைத்து விடுகிறேன் என்று சொல்லி வீட்டை கொடுப்பதற்கு தயாராகி விட்டார்.
இதற்கிடையில் மாயா சீனுவே கூட்டிட்டு புவனேஸ்வரி சென்ற தில்லாலங்குடி வேலையை கண்டுபிடித்து விட்டார். புவனேஸ்வரிக்கு உடந்தையாக இருந்த நபரை கூட்டிட்டு வந்து ஜானகி வீட்டு சாவியை கொடுக்கும்பொழுது அதை தடுத்து விடுகிறார். அப்பொழுது அந்த நபர் புவனேஸ்வரி செய்த எல்லா சூழ்ச்சியையும் சொல்லி ரகுராம் வீட்டை காப்பாற்றி விடுகிறார்.
அந்த வகையில் மாயாவை புரிந்து கொண்ட சீனு, நீ இல்லனா இந்நேரம் இந்த குடும்பமும் வீடும் நம்மிடம் இருந்து இருக்காது என்று சொல்லி மாயவுடன் சந்தோசமாக வாழ தயாராகி விட்டார். ஆனால் ரகுராம் மட்டும் மாயா மீது இருக்கும் கோபத்தை தாண்டி தற்போது பிடிவாதத்துடன் இருக்கிறார். இன்னும் கூடிய சீக்கிரத்தில் ரகுராமுக்கு எல்லாம் உண்மையும் தெரிந்த போது மனதார மாயவை மகளாக ஏற்றுக் கொள்வார்.