Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் ஆசைப்பட்ட மாதிரி ராஜி டான்ஸ் ஆடி இரண்டாவது பரிசை பெற்று பைக் கிப்டாக கிடைத்துவிட்டது. ராஜி தனக்காக தான் நடனமாடி இரண்டாவது பரிசை பெற வேண்டும் என்பதற்காக முதல் பரிசை விட்டுக் கொடுத்து இருக்கிறார் என்று கதிர் புரிந்து கொண்டார். உடனே ராஜிடம் எனக்காக தான் நீ இவ்ளோ பண்ணி இருக்கிறாய் என்று எனக்கு புரிகிறது.
அதே மாதிரி இன்னொரு விஷயமும் நீ செய்ய வேண்டும், அப்பொழுது தான் எனக்கு உண்மையான சந்தோசமும் பெருமையும் கிடைக்கும் என்று சொல்கிறார். உடனே ராஜி என்ன என்று கேட்ட பொழுது உன்னுடைய கனவை நிறைவேற்றும் விதமாக நீ போலீஸ் ஆபீஸராக வேண்டும். அப்படி ஆனால்தான் எனக்கு சந்தோசம் கிடைக்கும், எல்லோரும் பெருமையாக உன்னை பார்க்க வேண்டும் என ராஜியிடம் கதிர் கூறுகிறார்.
இன்னொரு பக்கம் கோமதி, மீனாவிடம் பிடிக்காமல் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணினாலும் இப்பொழுது பார்க்கும் இடத்தில் எல்லாம் தனியாக பேசிக் கொள்கிறார்கள் எனக்கு அது சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதை அங்கு இருந்த செந்தில் மற்றும் அரசி கேட்டு விடுகிறார்கள். உடனே கதிர் ராஜி பிடித்து தானே கல்யாணம் பண்ணினாங்க, நீ ஏன் இப்படி சொல்ற என்று செந்தில் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
பிறகு அரசியும், அம்மா இப்படி அடிக்கடி சொன்னதை நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். எதற்காக அப்படி சொல்றாங்க என எனக்கு புரியவில்லை என அரசி சொல்கிறார். உடனே இரண்டு பேரும் கோமதி இடம் கேட்ட நிலையில் கோமதி எப்படி சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
உடனே மீனா அவர்களை சமாளிக்கும் விதமாக வீட்டுக்கு பிடிக்காமல் தானே அவங்க கல்யாணம் நடந்துச்சு அதுதான் சொல்றாங்க என்று சொல்லி கதிருக்கு பைக் வேணும் என்பதற்காக தான் ராஜி நடனமாடி அந்த பரிசை பெற்று கொடுத்திருக்கிறார் என்று மீனா எல்லோரிடமும் உண்மை சொல்லி வருகிறார். இதை கேட்டதும் கோமதிக்கும் சந்தோசம் வந்துவிட்டது. உடனே எல்லோரும் சேர்ந்து ராஜி கதிரை கிண்டல் அடிக்கிறார்கள்.
பிறகு அனைவரும் சேர்ந்து காரில் ஊருக்கு கிளம்பி விட்டார்கள். ஆனாலும் செந்திலுக்கு ராஜி மற்றும் கதிர், காதல் மீது சின்ன சந்தேகம் வந்துவிட்டது. அடுத்ததாக குமரவேலு நடந்து விஷயத்தை யோசித்துக் கொண்டிருக்கும் போது சக்திவேல் வந்து என்ன நடந்தது என்று அதட்டி கேட்கிறார். பிறகு குமரவேலு நடந்த விஷயத்தை சொல்லி மீனா அடித்ததையும் சக்திவேல் இடம் சொல்லி விடுகிறார்.
இதனால் கோபப்பட்ட சக்திவேல் இந்த மீனா எல்லா பக்கமும் நமக்கு டார்ச்சர் கொடுக்கிறார். மீனாவின் ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி முதலில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து காலி பண்ண வேண்டும். அதுவும் அவமானப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சக்திவேல், மீனாவிற்கு ஆப்பு வைப்பதற்கு தயாராகி விட்டார். அதில் மீனாவும் சிக்கிக் கொண்டு சிரமப்பட போகிறார்.