சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு காரணம் இவர்களது காதல் மற்றும் திருமணம் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்ததால் தான்.
மேலும் இயக்குனர் ரவீந்தரின் உருவத்தை வைத்து ரொம்பவும் நெட்டிசன்கள் கிண்டல், கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இவர்கள் இருவரும் தங்களுடைய சந்தோஷமான தருணங்களில் எடுத்த புகைப்படங்களை எல்லாம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அப்படி ஒரு தருணத்தில் எடுத்த புகைப்படத்தை ரவீந்தர் பதிவிட்டது தான் இணையதளத்தில் இப்போது பயங்கர வைரலாகி இருக்கிறது.
ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படத்தில் மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பது போல் தெரிகிறது. அதை தான் நெட்டிசன்கள் இப்போது ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கின்றனர். மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதியிடம் இருந்து இந்த கேள்விக்கான பதில் வரவில்லை.
மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா!

ரவீந்தர்-மகாலட்சுமி திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே பல உருவ கேலி கிண்டல்களை எதிர் கொண்டு வருகின்றனர். அந்த கேலி கருத்துக்களை எல்லாம் இருவரும் பாஸிட்டிவாகவே எதிர் கொண்டனர். அப்போது பேட்டியில் பேசிய மகாலட்சுமி இது போன்ற நெகட்டிவ் கமெண்டுகளை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் எனவும், எங்களுக்குள் உண்மையான காதல் இருக்கிறதென்றும், எங்களுக்கென்று ஒரு குழந்தையை பெற்று கொள்ள தனக்கு ஐடியா இருப்பதாகவும் கூறியிருந்தார்.
மகாலட்சுமியின் இந்த திருமணம் இப்படி பேசு பொருளாக மாற உருவ கேலி என்பதை தாண்டி மற்றுமொரு காரணம், மகாலட்சுமி-ஈஸ்வர் காதல் பிரச்சனை தான். ஏற்கனவே திருமணமான ஈஸ்வர் என்ற சின்னத்திரை நடிகரும் மகாலட்சுமியும் காதலிப்பதாக அவருடைய மனைவி மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தார். இதனாலேயே மகாலட்சுமி பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என கருத்துக்கள் எழுந்தன.
தயாரிப்பாளர் ரவீந்திரனும் நடிகை வனிதாவின் திருமணத்தை பற்றி ரொம்பவே அதிகமாக ட்ரோல் செய்திருந்தார். அதனாலேயே இவரது திருமணமும் பலதரப்பட்ட மக்களால் விமர்சிக்கப்பட்டது. எல்லா நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி இப்போது மகா கர்ப்பமாக இருக்கிறார் என நிறைய பேர் வாழ்த்தி வருகின்றனர். எனினும் இந்த தகவலை மகாலட்சுமி-ரவீந்தர் தம்பதி தான் உறுதி செய்ய வேண்டும்.