Serial: சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்டி போட்டு எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். போதாதருக்கு புதுசு புதுசாகவும் சீரியல்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் ஏதாவது ஒரு சீரியலின் கதை மக்களை கவரவில்லை, டிஆர்பி ரேட்டிங்கில் அடிமட்டத்தில் இருக்கிறது என்றால் அந்த சீரியலை தூக்கி விடுகிறார்கள். அப்படித்தான் சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு சீரியல் 150 எபிசோடிலேயே முடிவுக்கு கொண்டு வருவதற்கு தயாராகி விட்டார்கள்.
இன்று கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த சீரியலை முடித்துவிட்டு அதற்கு பதிலாக புதுசாக அயலி என்ற சீரியல் வரப்போகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற வள்ளியின் வேலன் என்ற சீரியல் முடிவுக்கு வரப்போகிறது.
இந்த சீரியலில் வள்ளி மற்றும் வேலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோடி ஏற்கனவே திருமணம் என்ற சீரியலில் நடித்ததால் அவர்களுக்குள் காதல் மலர்ந்து நிஜ வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்கள். அப்படி ஒன்று சேர்ந்தவர்கள் சீரியலில் மறுபடியும் ஒன்றாக நடிப்பதற்கு வந்தார்கள்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கதைகள் போகவில்லை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏகப்பட்ட குழப்பங்களும் பிரச்சனைகளும் நிலவியதால் நாடகத்தை முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். இதற்கு பதிலாக தேஜஸ்வாணி நடிப்பில் அயலி என்ற புத்தம் புது சீரியல் ஜீ தமிழில் வரப்போகிறது.