டிஆர்பி ரேட்டிங்.. டாப் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்

Serial Trp Rating List: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் பொழுது போக்காக இருக்கிறது. அதனால் தான் தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டு அடுக்கடுக்காக சீரியல்களை கொடுக்கிறார்கள். இதில் எந்த சீரியல்கள் மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம். அதன்படி இந்த வாரத்தில் முதல் ஆறு இடத்தை பிடித்த சீரியல்களை பற்றி பார்க்கலாம்.

மருமகள்: பிரபு வீட்டுக்கு வந்த சத்தியா குடும்பத்தில் இருப்பவர்களை ஆட்டிப்படைக்கும் விதமாக அதிகாரம் பண்ணி வருகிறார். சத்யாவை பற்றி தெரியாமல் ஆதிரையின் அப்பாவும் சித்தியும் சத்யாவை பார்த்து வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்கலாம் என்று வந்திருக்கிறார்கள். இதனால் கோபப்படும் சத்தியா ருத்ர தாண்டவம் ஆடப்போகிறார். இப்படி பரபரப்பான சூழ்நிலையில் போகும் மருமகள் சீரியல் இந்த வாரம் 8.07 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை: ரோகினியின் முதல் கல்யாணம் பற்றி விஷயம் வெளிவராமல் இருந்தாலும் தற்போது விஜயா வீட்டுக்குள் இருந்து ஒவ்வொரு நாளும் சித்திரவதையை அனுபவித்து வருகிறார். ஆனால் எந்த தவறுமே பண்ணாமல் முத்துவும் பழியாடாக சிக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த ஒரு சீரியல் தான் விஜய் டிவியின் சீரியல்களில் அதிகமான புள்ளிகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் 8.45 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

எதிர்நீச்சல் 2: கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பான காட்சிகளுடன் மக்கள் எதிர்பார்த்தபடி சீரியல் அமைந்ததால் ஒரு படி முன்னேறி இருந்தது. ஆனால் இந்த வாரம் பழைய குருடி கதவைத் திறடி என்று சொல்வதற்கு ஏற்ப சீரியல் கதை தடம் புரண்டு வருகிறது. இதனால் தடுமாற்றத்தில் இருக்கும் எதிர்நீச்சல் 8.90 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திற்கு போய்விட்டது.

கயல்: விட்ட இடத்தை பிடிக்கும் விதமாக பின்னாடி போன கயல் சீரியல் மறுபடியும் முன்னேறும் விதமாக இந்த வாரம் 8.95 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மூர்த்தியின் நிலைமை என்னவென்று தெரியாமல் கயல் குடும்பத்தில் இருப்பவர்கள் தத்தளித்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் மூர்த்தி சர்ச்சையில் சிக்கிக் கொண்டதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை கொண்டு வராமல் கதையை உருட்டிக் கொண்டு வருகிறார்கள்.

மூன்று முடிச்சு: சுந்தரவல்லி, நந்தினியை மருமகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் ஆபீஸிலிருந்து வந்திருப்பவர்களிடம் வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தி விடுகிறார். இதனால் கோபப்பட்ட சூர்யா, நந்தினி என்னுடைய மனைவி ஆபீஸில் இருக்கும் எல்லா அதிகாரமும் நந்தனிடம் தான் இருக்கிறது என்று கெத்தாக சொல்லி நந்தினிக்கு பெருமை சேர்த்து விட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.88 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சிங்கப்பெண்ணே: பல நாளாக இழுத்துக் கொண்டு இருந்த ஆனந்தியின் கர்ப்பம் விஷயம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் ஊர் கார்களுக்கும் தெரிந்து விட்டது. இதனால் ஆனந்தியின் குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு பிரச்சனை பெருசாக வெடித்துக் கொண்டு வருகிறது. இதனால் அன்பு, ஆனந்தியை நான் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி அதிரடியாக முடிவு எடுக்கிறார். இந்த வாரம் 10.38 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.